HomeCinemaஇது வெறும் நடிப்பு அல்ல; தமிழ்நாட்டில் ரத்தம் சிந்திய வீரமும் தியாகமும் நிறைந்த வரலாற்றிற்கு உயிர்...

இது வெறும் நடிப்பு அல்ல; தமிழ்நாட்டில் ரத்தம் சிந்திய வீரமும் தியாகமும் நிறைந்த வரலாற்றிற்கு உயிர் கொடுத்திருக்கும் அனுபவம்! -‘திரெளபதி 2’ பட அனுபவம் பகிர்கிறார் நடிகர் ரிச்சர்ட் ரிஷி

Published on

நடிகர் ரிச்சர்ட் ரிஷி, சவாலான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தனது திறமையை நிரூபித்து வருகிறார். காதல் நாயகனாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய அவர், பின்னர் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, ஒரு சிறந்த நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். தற்போது, வரலாற்றுப் படமான ‘திரௌபதி 2’ மூலம் இதுவரை காணாத வீரத் தோற்றத்தில் ரசிகர்களை திரையில் சந்திக்க உள்ளார். ஜனவரி 23 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ’திரெளபதி 2’ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படம் குறித்தான அனுபவங்களை ரிச்சர்ட் ரிஷி பகிர்ந்து கொண்டார்.

“’திரௌபதி 2’ படத்தில் மன்னர் வீர சிம்ம கடவராயனாக நடித்திருப்பது என் வாழ்க்கையின் முக்கிய திருப்புமுனை. இது வெறும் நடிப்பு அல்ல; தமிழ்நாட்டில் ரத்தம் சிந்திய வீரமும் தியாகமும் நிறைந்த வரலாற்றிற்கு உயிர் கொடுத்திருக்கும் அனுபவம். இயக்குநர் மோகன் ஜியின் ‘திரௌபதி 2’ சினிமா என்பதைத் தாண்டி வரலாற்றின் மறுபிறப்பாக உள்ளது. ’திரௌபதி’ படத்திற்கு பிறகு அவருடன் மீண்டும் பணியாற்றுவது, நம்பிக்கையுள்ள தளபதியுடன் மீண்டும் போர்க்களம் சென்ற அனுபவம் போல இருந்தது” என்றார்.

மேலும் பகிர்ந்து கொண்டதாவது, “இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசை பேரரசர்களின் ஆன்மாவை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் பிலிப் கே. சுந்தரின் ஒளிப்பதிவு அரச கம்பீரத்தை அழகாகப் பதிவு செய்கிறது. ஆக்‌ஷன் சந்தோஷ் அமைத்த போர் காட்சிகள் வரலாற்று காவியங்களுக்கு இணையானவை. ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி ஆகியோருடன் இணைந்து நடித்தது ஒவ்வொரு காட்சியையும் மேலும் சிறப்பாக்கியுள்ளது. ‘திரௌபதி 2’ வரலாற்று திரைப்படம் என்பதைத் தாண்டி, நம் முன்னோர்களின் மறைக்கப்பட்ட போர்க்குரலை மீண்டும் உயிர்ப்பிக்கும் ஒரு வரலாற்றுப் பயணம். நேதாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம், தலைமுறைகள் கடந்து ஒலிக்கும் தமிழ் சினிமாவின் மிகத் துணிச்சலான வரலாற்றுக் காவியமாக இருக்கும். ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை கட்டிப்போடும் அனைத்து அம்சங்களுடனும் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சோலா சக்கரவர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷியுடன் ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Latest articles

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

வெள்ளித்திரை – சின்னத்திரை – தமிழ்த் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்! -தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா...

More like this

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...