HomeCinemaபிரியா பவானி சங்கர் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'ஹாட் ஸ்பாட் 2much ' படத்தின் முன்னோட்த்தை...

பிரியா பவானி சங்கர் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2much ‘ படத்தின் முன்னோட்த்தை வெளியிட்ட நடிகர்கள் விஜய் சேதுபதி – ஆர்யா!

Published on

பிரியா பவானி சங்கர் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2much ‘ படத்தின் முன்னோட்டத்தினை விஜய் சேதுபதி – ஆர்யா ஆகியோர் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இந்த படத்தில் அஸ்வின் குமார், எம். எஸ். பாஸ்கர், தம்பி ராமையா,ஆதித்யா பாஸ்கர், ரக்சன், பவானி ஸ்ரீ, பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி, ‘ஆதித்யா’ கதிர், விஜய் டிவி அமர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அறிமுக காணொலி வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதிலும் பேரலல் யுனிவர்ஸ் – லேட்டஸ்ட் தமிழ் சினிமா ப்ரோமோசன் ட்ரெண்ட் – என கலக்கலான கன்டென்ட்டுகள் இடம் பிடித்துள்ளதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. படம் இன்னும் ஒன்றிரண்டு வாரங்களில் வெளியாகவிருக்கிறது.

ஜெகதீஷ் ரவி – ஜோசப் பால் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை யூ. முத்தையன் மேற்கொள்ள கலை இயக்கத்தை சண்முகம் கவனித்திருக்கிறார். ஜனரஞ்சகமான ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கே ஜே பி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும், நடிகருமான கே. ஜே. பாலா மணி மார்பன் தயாரித்திருக்கிறார். படத்தை நடிகர் விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது.‌

Latest articles

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

வெள்ளித்திரை – சின்னத்திரை – தமிழ்த் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்! -தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா...

More like this