HomeCinemaகவின் _ ஆண்ட்ரியா நடித்த ஆக்சன் திரில்லர் திரைப்படம் 'மாஸ்க்' ஜனவரி 9, 2026 முதல்...

கவின் _ ஆண்ட்ரியா நடித்த ஆக்சன் திரில்லர் திரைப்படம் ‘மாஸ்க்’ ஜனவரி 9, 2026 முதல் Zee5 தளத்தில் பார்க்கலாம்!

Published on

கவின் _ ஆண்ட்ரியா ஜெரெமையா நடித்து சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘மாஸ்க்’ ஆக்சன் திரில்லர் திரைப்படத்தை வரும் ஜனவரி 9, 2026 முதல் Zee5 தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

படத்தை புதுமுக இயக்குநர் விகர்னன் அசோக் எழுதி இயக்கியுள்ளார். மாஸ்க் ஒரு பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம். பணம் மற்றும் லாபமே வாழ்க்கை என நினைக்கும் தனியார் டிடெக்டிவான வேலு (கவின்) என்பவனை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. ஒரு குற்ற சம்பவத்தில் அவனது வாழ்க்கை, மர்மமான முகமூடி அணிந்த கும்பல், நற்பணிகளின் பெயரில் செயல்படும் சக்திவாய்ந்த அமைப்புகள் மற்றும் பல அரசியல்வாதிகளின் வாழ்க்கையை புரட்டிப் போடக்கூடிய ரகசியங்களுடன் மோதும் போது முற்றிலும் தலைகீழாக மாறுகிறது. விசாரணை தீவிரமடையும் போது, வேலு குற்றத்தின் உண்மையை மட்டுமல்ல, தனது செயல்களின் விலையையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான்.

படம் குறித்து நடிகர் கவின் கூறுகையில், “மாஸ்க் ஏற்கனவே திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது ZEE5 மூலம் இன்னும் பெரிய ரசிகர்கள் வட்டத்தை அடையப் போவதில் மகிழ்ச்சி. வேலு பல அடுக்குகளைக் கொண்ட வித்தியாசமான கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தின் ஆழத்தை அதிகமானோர் ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.

இயக்குநர், தயாரிப்பாளர் வெற்றிமாறன் கூறுகையில் “இந்த படம் பேசும் கருக்கள் காலத்தை கடந்தவை. மாஸ்க் இப்போது ZEE5-ல் வெளியாகும் நிலையில், முதன் முறையாக இதை அனுபவிக்கும் புதிய பார்வையாளர்களிடம் சென்று சேரும் வாய்ப்பு கிடைப்பது மகிழ்ச்சி” என்றார்.

Latest articles

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

வெள்ளித்திரை – சின்னத்திரை – தமிழ்த் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்! -தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா...

More like this