HomeCinemaடான்ஸ் மாஸ்டர் ராபர்ட் அடங்காத காளையாக நடிக்கும் 'செவல காள' படத்தின் படப்பிடிப்பு மதுரை மேலூரில்...

டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் அடங்காத காளையாக நடிக்கும் ‘செவல காள’ படத்தின் படப்பிடிப்பு மதுரை மேலூரில் பூஜையுடன் துவக்கம்!!

Published on

டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் கதைநாயகனாக நடிக்கும் ‘செவல காள’ திரைப்படம்
மதுரையைக் களமாகக் கொண்டு வளர்ந்து வருகிறது. கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு மதுரை மேலூரில் பூஜையுடன் ஆரம்பமானது. தொடர்ந்து ஒத்தக்கடை, புது தாமரைப்பட்டி, இலங்கிப்பட்டி ஆகிய ஊர்களில் தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.

தனக்கு தவறு என்று பட்டால் அதை யார் செய்தாலும் அவர்களைத் தண்டிக்கத் தயங்காதவன் நாயகன். மதுரை அருகே ஒரு கிராமத்தில் வாழும் நாயகனின் அண்ணனை, ஊரையே தனதாக்கி தன் கட்டுப்பாட்டில் வைக்கும் ஊர் பெரிய பணக்காரர் அவமானப் படுத்த.. நாயகனான தம்பி களம் இறங்க.. அதன் பின் நடக்கும் சுவாரஸ்யமான காட்சிகள் தான் இந்த படம்.

வெளியூரில் இருந்து கிராத்துக்கு வரும் நாயகி ஆரம்பத்தில் நாயகனின் முரட்டுத்தனத்தை பார்த்து பயந்தாலும் அவனது குணத்தை அறிந்து அவனைக்காதலிக்க, அதற்கு எதிர்ப்பு எழ, நாயகன் வில்லனின் திட்டங்களை முறியடித்தாரா? காதலில் வெற்றி அடைந்தாரா? என்ற கேள்விகளுக்கு ஆக்‌ஷன், காதல், நகைச்சுவை, சென்டிமென்ட் ஆகிய அம்சங்களுடன் பதில் சொல்கிறது திரைக்கதை.

முரட்டு நாயகனாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்க அண்ணனாக ஆரியன், ஊர் பணக்காரராக சம்பத் ராம், நாயகியாக மீனாட்சி ஜெய்ஸ்வால் நடிக்கிறார்கள்.

இயக்குநர் பால் சதீஷ் யாரிடமும் உதவியாளராக பணிபுரியாமல், குறும்படங்கள் இயக்கி இன்று சாதனைபடைத்து வரும் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் போல் குறும்படங்கள் இயக்கி, இப்போது திரைப்பட இயக்குநராகியிருக்கிறார்.

படக்குழு:-
 
ஒளிப்பதிவு : ஆர்.ராஜாமணி, இசை : ப்ரித்வி, பாடகர்கள்: சங்கர் மாகாதேவன், அனுராதா ஶ்ரீராம்,பிரன்னா,வேல்முருகன் & முகேஷ். பாடல்கள்: சீர்காழி சிற்பி, எடிட்டிங்: எஸ் பி பிரான்சிஸ் – நிவேக் சுந்தர் நடனம்: ஆண்டனி, ராபர்ட், சிவாஜி & வினோத், ஸ்டண்ட்: ஸ்பியர்ஸ் சதீஷ் இணை இயக்குநர்: கே வி பாலன், ஸ்டில்ஸ்: ஆர்.மனோ, தயாரிப்பு நிர்வாகம்: மரிய மெசியா, போஸ்ட் புரொடக்‌ஷன்: graphic waves – நிவேக் சுந்தர், தயாரிப்பு: விங்ஸ் பிக்சர்ஸ், தயாரிப்பாளர்: பால் சதீஷ் – ஜூலி பி ஆர் ஓ: ஜான்சன்

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this