Friday, December 26, 2025
spot_img
HomeCinemaபிப்ரவரி 22, 2026-ல் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்... ஜி. கே. எம்.தமிழ்க்குமரன் தலைமையிலான தயாரிப்பாளர்களின்...

பிப்ரவரி 22, 2026-ல் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்… ஜி. கே. எம்.தமிழ்க்குமரன் தலைமையிலான தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியின் வேட்பாளர்களை கலைப்புலி எஸ்.தாணு அறிமுகப்படுத்தினார்!

Published on

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது.

தேர்தலில் திரு.ஜி.எம்.தமிழ்குமரன் தலைமையிலான தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியில் துணைத்தலைவர்கள் பதவிக்கு திரு ஆர்.கே.சுரேஷ் மற்றும் திரு.எஸ்.கமலக்கண்ணன் அவர்களும், செயலாளர்கள் பதவிக்கு திரு.ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் திருமதி.கமீலா நாசர் அவர்களும், பொருளாளர் பதவிக்கு திரு.என்.சுபாஷ் சந்திரபோஸ் அவர்களும், இணைச்செயலாளர் பதவிக்கு திருமதி.சுஜாதா விஜயக்குமார் அவர்களும் போட்டியிடுகின்றனர்.

மூத்த தயாரிப்பாளர்களான திரு.அழகன் தமிழ்மணி, திரு.சித்ரா லட்சுமணன், திரு.எச்.முரளி, திரு.எம்.கபார், திரு.ஆர்.மாதேஷ் ஆகியோருடன் சேர்ந்து திரு.சாலை சகாதேவன், திருமதி. பைஜா டாம், திரு.எஸ்.ஜோதி, திரு.வி.பழனிவேல், திரு.கே.செந்தாமரை கண்ணன், நீல்கிரிஸ் திரு.ஏ.முருகன், திரு.ஜி.எம்.டேவிட்ராஜ், டி.என்.தாய்சரவணன், திரு.கே.முருகன், திரு.வி.ஞானவேல், திரு.பிரவின்காந்த், திரு.வி.என்.ரஞ்சித் குமார், திரு.எஸ்.ஜெயசீலன், திரு.ராஜா @ பக்ருதீன் அலி அகமத், திரு.எம்.தனசண்முகமணி, திரு.பி.ஜி.பாலாஜி, திரு,இசக்கிராஜா, திரு.பி.மகேந்திரன், திரு.எஸ்.பிரப்தீஸ் சாம்ஸ், திரு.ஏ.ஏழுமலை, திரு.எஸ்.என்.ராஜராஜன் ஆகியோர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் 22-12-2025 அன்று ஹோட்டல் ராதா பார்க் இன்னில் மாலை 6.00 மணியளவில் தொடங்கி நடைப்பெற்றது. இக் கூட்டதிற்கு சிறப்பு விருந்தினர்களாக திரு.கலைபுலி எஸ்.தாணு, பெப்சி தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி, பேராசிரியர் திரு.ஏ.எஸ்.பிரகாசம், திரு.வி.சி.குகநாதன், இசையமைப்பாளர் திரு.தீனா, இயக்குனர் திரு.லிங்குசாமி, இயக்குனர் திரு.சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வேட்பாளர்களை திரு.கலைபுலி எஸ்.தாணு அவர்கள் அறிமுகப்படுத்தினார். சிறப்பு விருந்தினர்கள் வேட்பாளர்களை வாழ்த்தி பேசினார்கள். திரு.ஜி.எம்.தமிழ்குமரன் மற்றும் திரு.ஆர்.ராதாகிருஷ்ணன் தங்கள் அணி வெற்றி பெற்று நிர்வாகம் அமைந்தால் சங்க உறுப்பினர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பேசினார்கள். இக் கூட்டத்திற்கு பெருவாரியான உறுப்பினர்கள் கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது.

Latest articles

இளைஞன் காளி தன் காதலியின் பணத்தாசையை நிறைவேற்ற, தனது ஜெராக்ஸ் போலிருக்கிற உபேந்திரா என்ற பணக்காரனைக் கொலை செய்கிறான்....

ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷன் – லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் கூட்டணியில் உருவாகும் ‘சிக்மா’ திரைப்பட டீசர் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்தது!

  லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் 'சிக்மா' திரைப்படத்தில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாக, நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக...

ராதிகா நடித்துள்ள ‘தாய் கிழவி’ படத்தின் டீசர் வெளியானது! .

ராதிகா நடித்துள்ள 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தரமான கதைகளை தேர்ந்தெடுத்து, திறமையாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வரும் சிவகார்த்திகேயன்...

More like this

இளைஞன் காளி தன் காதலியின் பணத்தாசையை நிறைவேற்ற, தனது ஜெராக்ஸ் போலிருக்கிற உபேந்திரா என்ற பணக்காரனைக் கொலை செய்கிறான்....

ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷன் – லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் கூட்டணியில் உருவாகும் ‘சிக்மா’ திரைப்பட டீசர் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்தது!

  லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் 'சிக்மா' திரைப்படத்தில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாக, நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக...
error: Content is protected !!