Published on

எஸ்.கே. ஜீவா இயக்கத்தில், ஜெ எஸ் கே சதீஷ் குமார் தயாரிப்பில் பரபரப்பான திரில்லராக உருவாகிவரும் ‘குற்றம் கடிதல் 2’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.

தற்போது படத்தின் அனைத்து தொழில்நுட்ப மற்றும் கலை சார்ந்த அம்சங்களும் மிகத் துல்லியமாக வடிவமைக்கப்படும் வகையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழு முழு கவனம் செலுத்தி வருகிறது. படப்பிடிப்பின் போது பதிவான நடிப்பின் தீவிரமும் இயல்பும் குன்றாமல் இருக்க, அப்படத்தின் இயக்குநர் எஸ்.கே. ஜீவா டப்பிங் பணிகளை அவரே நேரடியாக மேற்பார்வை செய்து வருகிறார்.

படத்தில் பாண்டியராஜன், அப்பு குட்டி, பாலாஜி முருகதாஸ், தீபக், பாவல், பத்மன், பி.எல். தேனப்பன், சாந்தினி தமிழரசன், கீர்த்தி சாவ்லா, விஜி சந்திரசேகர், லவ்லின், ஜோவிதா லிவிங்ஸ்டன், ரோஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

காட்சிகள் கேரளாவின் பல்வேறு பகுதிகளில், தமிழ்நாட்டின் கொடைக்கானல், தேனி, சிறுமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் டிரெய்லர், பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

Latest articles

ஜீவி பிரகாஷ் நடித்துள்ள ‘வெக்கை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஜீவி பிரகாஷ் நடித்துள்ள 'வெக்கை' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ், டிவைன் புரொடக்ஷன்ஸ் இணைந்து...

ஈகோ ராமன் சினிமா விமர்சனம்

'மனிதனிடம் இருக்கக்கூடாதது ஈகோ' என்பதை வலியுறுத்தும் சிறு முதலீட்டுப் படைப்பு. ராமன் பயங்கர ஈகோ பிடித்த தலைமையாசிரியர் . சக...

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படத்தை துவங்கிவைத்த அமைச்சர் ராஜ்மோகன்! 

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட...

பிளாஸ்ட் சினிமா விமர்சனம்

சாதாரண கராத்தே மாஸ்டர் குடும்பத்துக்கும் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக மலைக் கிராமம் ஒன்றை ஒட்டுமொத்தமாக பலிகொடுக்க தயாராகும் கார்ப்பரேட்...

More like this