HomeCinemaநாங்கள் வாழ்ந்ததாக உணர்ந்த ஒரு கதையைச் சொல்ல விரும்பினோம்! -அங்கம்மாள் பட இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன்

நாங்கள் வாழ்ந்ததாக உணர்ந்த ஒரு கதையைச் சொல்ல விரும்பினோம்! -அங்கம்மாள் பட இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன்

Published on

கீதா கைலாசம் கதைநாயகியாக நடித்துள்ள ’அங்கம்மாள்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று படம் வெளியாகிறது.

படம் குறித்து இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “உண்மையாக இந்தக் கதை நடந்த மண்ணிலிருந்தும், மக்களிடம் இருந்து இந்தப் படத்தை உருவாக்க விரும்பினோம். நாங்களும் வாழ்ந்ததாக உணரும் ஒரு படத்தை உருவாக்கியுள்ளோம். அங்கம்மாள் கதாபாத்திரத்தை நடிகை கீதா கைலாசம் மிகவும் திறமையாக பிரதிபலித்துள்ளார். அவர் அந்த கிராமத்தில் வாழ்ந்து அங்குள்ள பெண்களின் ஒவ்வொரு சைகையையும் உள்வாங்கினார். அவரது மிகவும் கண்ணியமான நடிப்பு இந்த படத்தின் ஆன்மா. ’வடசென்னை’ படத்திலேயே சரண் சக்தியின் நடிப்பு மிகவும் பிடிக்கும். இந்தக் கதையின் வலுவான தூணாக தீவிரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் நடிகர் பரணியின் கதாபாத்திரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அவருக்கு சிறப்பு பாராட்டுகள்!

நீண்ட இரவுநேர படப்பிடிப்பு, கணிக்க முடியாத கிராமத்தின் காலநிலை என அனைத்து சூழல்களையும் எங்கள் படக்குழு தைரியமாகவும் நேர்மையுடனும் சந்தித்தது. நாங்கள் எடுத்த மற்றொரு தைரியமான முடிவு சிங்க்- சவுண்ட். இதற்கு படக்குழு மற்றும் நடிகர்கள் என அனைவரிடம் இருந்து முழுமையான ஒத்துழைப்பு தேவைப்பட்டது. இது ஒலியை பதிவு செய்யும் குழுவினருக்கும் சவாலான விஷயம்தான்.

இசை, காட்சிகள் என ஒவ்வொரு துறையின் நோக்கமும் ஒன்றுதான்…அது உண்மை! எங்கள் நோக்கத்தை தயாரிப்பாளர்களும் முழுமையாக ஆதரித்தனர். இந்தக் கதை எளிமையானதாகத் தோன்றினாலும் பாரம்பரியம், அடையாளம் மற்றும் பெருமை ஆகியவற்றை பற்றி ஆழமாகப் பேசும் படமாக வர வேண்டும் என விரும்பினர். அவர்களின் ஆதரவு இல்லாமல், அங்கம்மாள் படத்தை நாங்கள் எடுத்திருக்க முடியாது” என்றார்.

இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் ஒரு நேர்மையான, கிராமப்புறக் கதையை பெரிய திரைக்குக் கொண்டுவருகிறார். தமிழ்நாட்டு கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்தக் கதைக்களத்தில் ரவிக்கை உடுத்தாத பழக்கம் கொண்டவர் அங்கம்மாள். அவரது மகன் திருமணம் முடிந்த பின்னர் தன்னுடைய மனைவி தாயின் ரவிக்கை அணியாத பழக்கத்தை எப்படி எடுத்துக் கொள்வாள் என்று கவலைப்படும்போது குடும்பத்தில் எப்படி மோதல் வெடிக்கிறது என்பதை இந்தக் கதை பேசுகிறது. கேட்பதற்கு சாதாரண விஷயமாகத் தோன்றினாலும் அடையாளம், கண்ணியம், பெண்மை மற்றும் ஒரு குடும்பத்திற்குள் உணர்ச்சிபூர்வமான பேச்சு என மனதைத் தொடும் கடினமான கதையாக இது இருக்கும்.

Latest articles

திரைத்துறையினர் கூடிய பிரமாண்ட விழாவில் தமிழக முதல்வர் விஜய் பெயரில் புதிய விருது அறிவிப்பு!

2025ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள் மற்றும் தொழில்நுட்ப...

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி - இயக்குநர் பாபி கொல்லி - கே வி என் புரொடக்ஷன்ஸ்-  கூட்டணியில் தயாராகும்'...

இளைஞர்களின் காதல் வாழ்க்கையை புதுமையாக பேசும் ‘யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

https://www.youtube.com/watch?v=OrIqzmpg04k AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், அறிமுக இயக்குநர் விக்கி பாஸ்கர் இயக்கத்தில்,...

காஜல் அகர்வால் – ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24-ம் தேதி வெளியாகிறது!

MIG புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் இந்த திரைப்படத்தை வழங்குகிறது. அனைவரது கவனத்தையும் கவரும் வகையில்...

More like this