HomeMovie Reviewரஜினி கேங் சினிமா விமர்சனம்

ரஜினி கேங் சினிமா விமர்சனம்

Published on

ரசிக்கத்தக்க காமெடி கலாட்டாக்களோடு ‘ரஜினி கேங்.’

ஊரைவிட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்துகொள்ள புறப்பட்ட அந்த காதலர்கள் லிஃப்ட் கேட்டு ஏறிய காரில் திருடன் ஒருவனும் லிஃப்ட் கேட்டு ஏறுகிறான். காரை ஓட்டும் டிரைவர் தன்னை யாரென்றே தெரியாத ஒருவித பாதிப்புக்கு ஆளானவர். காரில் பயணிக்கும் காதலர்கள் போக நினைத்த ஊர் வேறு. போய்ச் சேர்ந்த இடம் வேறு. இன்னொரு பக்கம் அவர்கள் பயணித்த கார் ஒரு அமைச்சரிடமிருந்து திருடப்பட்டிருக்க அதை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் எப்படியும் காதலர்களைச் சுற்றி வளைத்துவிடுவார்கள். காதலன் சற்றுமுன் நடந்ததைக்கூட மறந்துவிடக் கூடியவர்.

இப்படி பல சிக்கல்கள். அதையெல்லாம் காதலர்கள் எப்படி சமாளிக்கிறார்கள்? எப்படி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பது கதையோட்டம்… இயக்கம் எம் எஸ் ரமேஷ்பாரதி

ரஜினி கிஷன் புதுமுகம் என்றாலும் காமெடி கதைக்கேற்றபடி நடிப்பதில் குறைவைக்கவில்லை; காமெடியோடு நடனமும் நன்றாக வருகிறது.

அவருக்கு ஜோடியாக வருகிற திவிகாவின் இளமையும் அழகும் பாடல் காட்சிகளுக்கு உதவுகிறது. காதலனின் ஞாபக மறதியால் அவதிப்படுவது, அமானுஷ்ய சக்தியின் பிடியில் சிக்கி பேயாட்டம் போடுவது என கேரக்டருக்கு பொருத்தமான நடிப்பையும் நல்லவிதமாக தந்திருக்கிறார்.

முனீஷ்காந்த் தான் யாரென்றெ தெரியாதவராக, என்ன செய்கிறோம் எதற்காக செய்கிறோம் என தெரியாமல் எதைஎதையோ செய்து ரசிக்க வைக்கிறார். மொட்டை ராஜேந்திரன் ஆவிகள் நடமாடும் மையத்தில் செய்யும் அதிரிபுதிரி அட்டகாசங்களால், கெட்டப்பால் கலகலப்பூட்டுகிறார். திருடனாக வருகிற கல்கி ராஜாவுக்கும் காமெடி களேபரத்தில் முக்கியப் பங்கிருக்கிறது. கூல் சுரேஷும் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். லொள்ளு சபா மனோகர் உள்ளிட்டோரும் கதையில் கலந்து உறவாடுகிறார்கள்.

இயற்கை பசுமை பரப்பியிருக்கும் ஏற்காட்டின் செழுமையை ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ்குமாரின் கேமரா வழி பார்ப்பது கண்களுக்கு ஜில்லென்றிருக்கிறது.

பாடல்களின் இசையில் எனர்ஜியேற்றியிருக்கும் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபெர்ட் பின்னணி இசை தலைவலியை உருவாக்கலாம். அந்தளவுக்கு அதிரடித்திருக்கிறார்.

காதல் காமெடி, ஹாரர் காமெடி இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்திருக்கும் ரஜினி கேங்கில் நுழைந்தால் ரசித்து சிரிப்பது உறுதி!

Rating 3 / 5

Latest articles

ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நடிகை அனுமோல்!

நவராத்திரி திருவிழாவின் இறுதி நாளான விஜயதசமி நாளன்று, குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இரவு, பகல் பாராமல் ஆட்டோ ஓட்டும்...

காதலும் நகைச்சுவையும் கலந்த ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ ‘ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது!

'நாய் சேகர்' புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான‌ 'கோயம்பத்தூர்...

‘சிவப்பு நட்சத்திரம்’ திரைப்பட தலைப்பை வெளியிட்டார் நடிகர் சமுத்திரகனி!

லீஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் 'சிவப்பு நட்சத்திரம்' என படத்தின் டைட்டிலை, நடிகர் சமுத்திரக்கனி தனது சமுக வலைதளங்களில்...

பா ஜ க எச். ராஜா – டாக்டர் எஸ். ராஜா நடிக்கும் ‘செய் செய்யாதே’ அக்டோபர் 30 முதல் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது!

மருத்துவ விழிப்புணர்வு, போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் சமூகப் பொறுப்பை மையமாகக் கொண்ட சமூக விழிப்புணர்வுத் திரைப்படம் ‘செய் செய்யாதே’...

More like this