HomeCinemaவிடிய விடிய எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ்... பிரமாண்டமாக நடந்து முடிந்த விஷாலின் மகுடம் படப்பிடிப்பு!

விடிய விடிய எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ்… பிரமாண்டமாக நடந்து முடிந்த விஷாலின் மகுடம் படப்பிடிப்பு!

Published on

விஷால் நடிப்பில் மாபெரும் படைப்பாக உருவாகி வரும் ‘மகுடம்’ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு 17 நாட்கள் தொடர்ந்து நடந்தது. அதிரடியான கிளைமாக்ஸ் படப்பிடிப்பு மாலை 6 மணி முதல் காலை 6மணி வரை 12மணி நேரம் நடைபெற்று நிறைவடைந்தது.

சண்டைக் காட்சிகள் மிக பிரமாண்டமாக படமாக்கப்பட்ட இந்த இரண்டாவது கட்ட படப்பிடிப்பில், நடிகர், நடிகைகள், நூற்றுக்கணக்கான ஸ்டண்ட், நடன கலைஞர்கள், கணினி கிராபிக்ஸ் வல்லுனர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் நிறைந்த இப்படத்தின் காட்சி பிரமாண்டமாகவும், மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட இந்த கிளைமாக்ஸ், காட்சியமைப்பின் வலிமையான, உணர்ச்சியின் ஆழம், அதிரடி காட்சிகளின் எழுச்சி ஆகியவற்றை இணைத்து, படம் முழுவதும் ஒரு தனித்துவமான அனுபவத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

நடிகர் விஷால் இயக்குநராகும் முதல் முயற்சியான மகுடம், ஒரு சாதாரண படம் அல்லாமல், சினிமா படைப்பை நேசிக்கும் ஒருவரின் உன்னத பயணம். நடிப்பு, இயக்கம் இவைகளில் ஒரு புதிய அனுபவத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

பிரபல ஸ்டண்ட் இயக்குநர் திலீப் சுப்பராயன், நடன இயக்குனர் அசார் ஆகியோர்கள் நிஜத்தன்மை நிரம்பிய, அதிரடி காட்சிகளை வடிவமைத்தும், படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளார்கள்.

படக்குழுவினர்கள் இந்த 17நாட்கள் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு குறித்து பேசியபோது “ஒவ்வொரு நாளும் கடின உழைப்பு, பொறுமை, ஆர்வம், தளராத உறுதி ஆகியவற்றின் கலவையாக இருந்தது, இப்படத்தின் மையக் கருத்தான வீரமும் உணர்ச்சியும் இந்த படப்பிடிப்பில் முழுமையாகப் பிரதிபலித்தது” என்கின்றனர்.

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் 2026-ல் வெளியாகி மக்களின் மனதில் மிகப்பெரிய வெற்றி பெறும் என நம்பலாம்.

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this