HomeCinemaஅருள்நிதி - மம்தா மோகன்தாஸ் நடித்துள்ள 'மை டியர் சிஸ்டர்' படத்தின் ஃபன்னான விஷூவல் புரோமோவுக்கு...

அருள்நிதி – மம்தா மோகன்தாஸ் நடித்துள்ள ‘மை டியர் சிஸ்டர்’ படத்தின் ஃபன்னான விஷூவல் புரோமோவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெருகும் வரவேற்பு!

Published on

அருள்நிதி- மம்தா மோகன்தாஸ் நடிப்பில், பிரபு ஜெயராம் இயக்கிய ‘மை டியர் சிஸ்டர்’ அறிவிப்பும் ஃபன்னான விஷூவல் புரோமோவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது!

‘பாசமலர்’, ‘கிழக்கு சீமையிலே’, ‘வேதாளம்’ என பல படங்கள் அண்ணன் – தங்கை பாசத்தை பல தலைமுறைகளாக பேசி வருகிறது.

அந்த வரிசையில் இணையும் படமாக மை டியர் சிஸ்டரை ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற தன் அறிமுக படத்திலேயே விமர்சன ரீதியாக பாராட்டுகள் பெற்ற பிரபு ஜெயராம் படத்தை இயக்கியுள்ளார்.

கதை சார்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருள்நிதி மற்றும் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் மம்தா மோகன்தாஸ் இருவரும் அண்ணன்- தங்கை கதாபாத்திரத்தில் உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளனர்.

‘பைசன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘மை டியர் சிஸ்டர்’ படத்தில் இசை ரசிகர்களுக்குப் பிடித்த ஏழு பாடல்களை இயற்றி இருக்கிறார் நிவாஸ் பிரசன்னா.

உணர்வுப்பூர்வமான மற்றும் மகிழ்ச்சி நிறைந்த பல தருணங்களைக் கொண்ட ‘மை டியர் சிஸ்டர்’ படத்தின் கண்ணை கவரும் புரோமோ அறிவிப்பு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

படம் குறித்து இயக்குநர் பிரபு ஜெயராம் பகிர்ந்து கொண்டதாவது, “ஆணாதிக்கவாதியான பச்சை கிருஷ்ணனுக்கும் பெண்ணியவாதியான அவனது அக்கா நிர்மலா தேவிக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள்தான் இந்தக் கதை. இந்த விஷூவல் புரோமோ உருவாவதற்கு பின்னால் செட்டில் அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸின் ஜாலியான பல தருணங்களை கொண்டே உருவாக்கினோம். திரையிலும் இவர்களது காம்பினேஷன் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும்” என்றார்.

பேஷன் ஸ்டுடியோஸ், தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பகிர்ந்து கொண்டதாவது, “அர்த்தமுள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களுடன் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. நல்ல கதைகள் மூலம் தனது திறமையை நிரூபித்து வரும் அருள்நிதி இந்தப் படம் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர்வார். தனது தேர்ந்த ஆழமான நடிப்பிற்கு பெயர் பெற்ற மம்தா மோகன்தாஸ் இதிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

படத்தின் மையக்கருவை விளக்கும் வகையில்தான் இந்த புரோமோ கிளிம்ப்ஸை உருவாக்கினோம். கோல்மைன்ஸ் டெலிஃபிலிம்ஸ், தயாரிப்பாளர் மனிஷ் ஷாவுடன் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்திருப்பது மகிழ்ச்சி. தமிழின் பல படங்களை இந்தியில் டப் செய்து வெளியிட்டு அங்குள்ள பார்வையாளர்களின் கவனத்தை தமிழ் சினிமா பக்கம் திருப்புவதில் மனிஷ் ஷா முக்கிய பங்காற்றி வருகிறார். இந்தக் கதை எண்டர்டெயின் செய்வதோடு பல உணர்வுப்பூர்வமான தருணங்களையும் கொண்டுள்ளது என்பதை உறுதியளிக்கிறேன்” என்றார்.

படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நிறைவடையும் தருணத்தில் உள்ளது. சமூகத்திலும் குடும்பத்திலும் ஆண், பெண் இருவரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

வெவ்வேறு ஜானர்களில் பார்வையாளர்களுக்கு நெருக்கமான தரமான கதைகளை தொடர்ந்து தயாரித்து வருகிறது பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம். குடும்ப பார்வையாளர்களுக்குப் பிடித்த வகையில் விறுவிறுப்பான, எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த மற்றும் உணர்வுப்பூர்வமாக தொடர்புபடுத்திக் கொள்ளும் பல கதைகளையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...