HomeMovie Reviewகாந்தா சினிமா விமர்சனம்

காந்தா சினிமா விமர்சனம்

Published on

கறுப்பு வெள்ளை திரைப்பட காலத்துக் கதை; கிரைம் திரில்லர் பாணி திரைக்கதையில் உருவாகியிருக்கும் ‘காந்தா.’

‘நடிப்புச் சக்கரவர்த்தி’ என ஊர் உலகம் கொண்டாடுகிற அளவுக்கு தமிழ்த் திரையுலகின் புகழ் பெற்றவராக இருக்கிறார் டி கே மகாதேவன். இளவயதிலேயே அவரது திறமையறிந்து, தான் இயக்கும் படங்களில் கதாநாயகனாக நடிக்கவைத்து அவர் புகழ் பெற காரணமாக இருந்தவர் கோதண்டராமன்.

அவர் இயக்குகிற ‘காந்தா’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் மகாதேவன், மக்களிடம் தனக்கிருக்கும் புகழ் வெளிச்சத்துக்கு ஏற்ப காட்சிகளில் மாற்றம் செய்யச் சொல்கிறார். இயக்குநர் தான் நினைத்தபடி மட்டுமே எடுப்பேன் என்கிறார்.

இந்த, வளர்த்துவிட்ட இயக்குநருக்கும் வளர்ந்துவிட்ட நடிகருக்குமான கருத்து வேறுபாட்டினால் ஷூட்டிங் ஸ்பாட் மினி போர்க்களமாக மாறுகிறது.

இருவரது சண்டைக்கிடையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு கொலை நடக்க, அதை செய்தது ஹீரோவா? இயக்குநரா? என்ற கோணத்தில் நடக்கும் போலீஸ் விசாரணையால் கதையில் பரபரப்பு கூடுகிறது.

படம் யார் நினைத்தபடி உருவானது என்பதும், கொலை செய்தது யார், ஏன் என்பதும் பரபரப்பான கிளைமாக்ஸ். இயக்கம் செல்வமணி செல்வராஜ்

தான் பெற்றிருக்கும் ‘நடிப்புச் சக்கரவர்த்தி’ என்ற பட்டப்பெயருக்கேற்ப, தான் நடிக்கும் படத்தில் காதல், கோபம், இயலாமை, விரக்தி என உணர்வுகளை அதன் தன்மை மாறாமல் காட்டி அப்ளாஸ் பெறுகிறார் துல்கர் சல்மான்.

அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி சிறப்பாக நடித்து, நிஜ வாழ்க்கையில் அவரது காதலியாகி உணர்வுபூர்வமாக நடித்து கவனம் பெறுகிறார் பாக்யஸ்ரீபோர்ஸ்.

இந்த சீனை மாற்ற வேண்டும், அந்த சீனை மாற்ற வேண்டும், கிளைமாக்ஸ் இப்படித்தான் இருக்க வேண்டும் என தான் வளர்த்துவிட்ட நடிகர் செய்கிற அடாவடிகளைச் சமாளித்து, படத்தை தன் விருப்பப்படி எடுக்க முயற்சிக்கும் இயக்குநராக சமுத்திரகனி. ஈகோவை விட்டுத்தராதவராக ஆத்திர ஆவேசத்தை வெளிப்படுத்தும் விதம் அவரது கேரக்டருக்கு கம்பீரம் தருகிறது.

படப்பிடிப்பு தளத்தில் நடந்த கொலையைச் செய்தது யார் என்பதை கண்டுபிடிப்பதற்கான விசாரணையில் இறங்கும் காவல்துறை அதிகாரியாக ராணா டகுபதியின் நடிப்பில் அலட்டல் அதிகம்.

நிழல்கள் ரவி, ரவீந்திர விஜய், ஆடுகளம் நரேன், வையாபுரி, பக்ஸ் என நன்றாக நடிக்கிற பலர் இருக்க, அத்தனைப் பேருக்கும் கதையில் முக்கியத்துவம் இருக்கிறது.

1950 காலகட்டத்தில் நடக்கும் கதைக்கேற்ப கதை நிகழ்விடங்களை அமைத்திருக்கும் கலை இயக்குநர் ராமலிங்கம்,

கதையின் விறுவிறுப்புக்கேற்ப பின்னணி இசையைத் தந்திருக்கும் ஜானு சந்தர்,

நடிகர் நடிகைகளை அந்தக் கால நடிகர் நடிகைகளைப் போல் மாற்றியிருக்கும் மேக்கப் ஆர்டிஸ்ட்,

ஒளிப்பதிவால் காட்சிகளின் தரத்தை அதிகரித்திருக்கும் டானி சஞ்செஸ் லோபெஸ் என ஒவ்வொருவரையும் தனித்தனியாக பாராட்ட வேண்டும்.

பழம்பெரும் நடிகர் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை லேசாக தொட்டுக்கொண்டு, சுவாரஸ்யமான திரைக்கதையால் தனித்துவமான படைப்பாகியிருக்கும் இந்த காந்தா ரசிகர்கள் தவறவிடக் கூடாத படங்களில் ஒன்று!

Rating 4 / 5

 

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...