HomeCinemaகவின் ப்ரோவுக்கு 'இவனுடன் சேர்ந்தால் உருப்பட மாட்டாய்' என்பார்களே, அந்த மாதிரி ஒரு ரோல்! -மாஸ்க்...

கவின் ப்ரோவுக்கு ‘இவனுடன் சேர்ந்தால் உருப்பட மாட்டாய்’ என்பார்களே, அந்த மாதிரி ஒரு ரோல்! -மாஸ்க் படவிழாவில் இயக்குநர் விகர்ணன் 

Published on

கவின், ஆண்ட்ரியா ஜெரேமியா, ருஹானி சர்மா நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில், அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் மாறுபட்ட களத்தில் உருவாகியிருக்கும் கமர்ஷியல் திரைப்படம் ‘மாஸ்க்.’

இந்த படம் வரும் நவம்பர் 21-ம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் விகர்ணன் ”என்னுடைய உதவி இயக்குநர்களுக்கும் படத்தில் உதவிய வெற்றிமாறன் சார் உதவியாளர்களுக்கும் நன்றிகள். நான் இங்கு நிற்க காரணமான ஆண்ட் ரியா மேடமுக்கு நன்றி. அவர் தான் வெற்றிமாறன் சாரிடம் என் கதையைப் படிக்கத் தந்தார். சொக்கலிங்கம் அண்ணா நிறையப்பேரை வளர்த்துவிட்டுள்ளார், என்னையும் வளர்த்துவிட்டதற்கு நன்றி. ஆர் டி ராஜசேகர் அவர் ஒரு ட்ரீட். ஷூட்டிங்கில் அவர் இருந்தாலே ஜாலியாக இருக்கும்.

நெல்சன் அண்ணாவே ஒரு ஜானர் தான் அவர் இந்தப்படத்தில் இருக்கிறார் ஆனால் யாருக்கும் தெரியமாட்டார். அவருக்கு நான் நிறையக் கடமைப்பட்டுள்ளேன். விஜய் சேதுபதி அண்ணா.. அசோக் செல்வன் என் நண்பன், உங்களைப் பற்றி நிறையப் பேசுவான். நீங்கள் நல்ல இதயம் கொண்ட மனிதர். வாழ்த்த வந்ததற்கு நன்றி.

ருஹானி சர்மா திறமையானவர் சிறப்பாக நடித்துள்ளார். நண்பர் ஜீவி, நீங்கள் நான் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர வைத்தீர்கள். நீங்கள் தந்த இசைக்கு நன்றி.  ரெடின் ஒரு அழகான ரோல் செய்துள்ளார். ராமரை எடிட்டிங்கிற்கு கூட்டி வந்ததற்கு வெற்றிமாறன் சாருக்கு நன்றி. ஸ்டைலீஷாக எடிட் செய்துள்ளார். ஐயப்பன் அண்ணாவுடன் நிறையப்படம் சேர்ந்து செய்வேன் என் கூடவே இருந்தார் அவருக்கு நன்றி.

கவின் ப்ரோ படத்தில் அவர் பெயர் வேலு. இவனுடன் சேர்ந்தால் உருப்பட மாட்டாய் என்பார்களே, அந்த மாதிரி ஒரு ரோல். அவருக்குள் ஒரு கெட்டவனும் இருப்பான், நல்லவனும் ஓரத்தில் இருப்பான். அதை மிக அழகாகத் திரையில் கொண்டு வந்துள்ளார். அவர் தந்த ஆதரவிற்கு நன்றி. பீட்டர் ஹெய்ன் மாஸ்டருக்கு நன்றி. அவர் மாதிரி ஒரு லெஜண்ட் நம் திரைத்துறையில் இருப்பது நமக்குப் பெருமை.

வெற்றிமாறன் சார் அட்வைஸ் கேட்டால் நீங்கள் வாழ்க்கையில் வளர்வீர்கள். அவர் தந்த வழிகாட்டுதலுக்கு நன்றி. நான் உங்களுடன் படம் செய்வதை என் வீட்டிலேயே யாரும் நம்பவில்லை எனக்கு நீங்கள் தந்த வாய்ப்புக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் கவின் ”எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. என் லைஃபில் நான் நம்பும் விசயம்,, அன்றன்று நாள் நல்லபடியாக போக வேண்டும் என்பது தான், அதில் செய்ய வேண்டியதையெல்லாம் செய்து முடித்தால், எல்லாம் நன்றாக நடக்கும் என நம்புகிறேன்.

விஜய் சேதுபதி அண்ணாவுக்கு நன்றி. அவரின் பீட்சா படத்தில் தான் நான் அறிமுகமானேன். நாம் விரும்புவதை விருப்பத்துடன்  செய்தால் அது நடக்கும் என நிரூபித்தவர். அவர் வந்து வாழ்த்தியதற்கு நன்றி.

வெற்றிமாறன் சார் அவரெல்லாம் கூப்பிடுவார் என நான் நினைத்ததில்லை. அவர் ஆபிஸில் இருந்து கால் வந்தது. அவரே தான் கதை சொன்னார், அவரே கதை சொல்கிறார் என்றால் அவர் கதை மேல் வைத்திருக்கும் நம்பிக்கை எனக்கு முக்கியமாகப் பட்டது. உங்களை நம்பி வருகிறேன் பார்த்துக்கொள்ளுங்கள் என்றேன். இன்று வரை பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் மிக ஜாலியானவர் அவரை நான் நண்பராகவே நினைத்துவிட்டேன். அவர் சொக்கலிங்கம் சார் பற்றி மிகப்பெருமையாக சொன்னார். இந்தப்படம் ஜெயித்தே ஆக வேண்டும் என்றார், அது ஆடுகளம் இண்டர்வெல் மாதிரி இருந்தது. கண்டிப்பாகப் பந்தயம் அடித்துவிடுவோம் சார்.

ஆண்ட்ரியா மேடம் தான் முதலில் கதை கேட்டார். அவர் நடிப்பு மிகச்சிறப்பாகப் பேசப்படும். ஜீவி சார் இத்தனை வேலைகளை எப்படிச் செய்கிறார் என ஆச்சரியமாக இருக்கும். சார் உடலை பார்த்துக்கொள்ளுங்கள். விகர்னன் மிகச்சரியாகப் பேசினார். எல்லாவற்றையும் மிகச்சரியாகச் செய்து படத்தைக் காப்பாற்றித் தந்துள்ளார்.

பவன் சார், ரெடின் சார் நடிப்பு கண்டிப்பாக பேசப்படும். படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. நெல்சன் அண்ணன் வாழ்க்கையில் என்னைச் சரியாக வழிநடத்தி என்னைக் கூட இருந்து பார்த்துக் கொள்வதற்கு நன்றி. நவமபர் 21 படம் திரைக்கு வருகிறது. அனைவரும் பார்த்து ரசிப்பீர்கள் என நம்புகிறேன் நன்றி” என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன் ”மாஸ்க் படத்தை நான் புதிதாக ஒரு விசயம் பற்றி கற்றுக்கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் முடிந்த வாய்ப்பாக நினைக்கிறேன். ஆண்ட் ரியா ஒரு திரைக்கதை அனுப்பி இதைத் தயாரிக்கிறேன் என்றார், அவர் தயாரிக்கும் அளவு என்ன கதை என்று தான் படித்தேன். அதில் சில மூமெண்ட்ஸ் மிக மிகப் பிடித்திருந்தது.

சொக்கலிங்கம் ஒரு படம் தயாரிப்பதாக இருந்தார். நான் ஆண்ட் ரியாவுடன் சேர்ந்து தயாரியுங்கள் என்றேன். அப்படி தான் மாஸ்க் ஆரம்பித்தது. பின்னர் யாரையெல்லாம் இப்படத்தில் நடிக்க வைக்கலாம் என ஆரம்பித்து கவினை அழைத்தோம். ஸ்டார் படத்திற்கு முன்பே அவரை இப்படத்தில் நடிக்கக் கேட்டோம்.

விகர்னன் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளித்து எளிதாகக் கையாள்வார். அது எனக்குப் பிடித்திருந்தது. சொக்கு தான் ஆர் டி ராஜசேகரை அழைக்கலாம் என்றார். அவர் கிளைமாக்ஸுல் செய்த லைட்டிங் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜீவி இப்படத்தில் செய்ய இசை மிக மிகக் கச்சிதமாக இருக்கிறது, மிக அற்புதமாக இருக்கிறது. விகர்னன் இப்படத்தில் பேப்பரில் இருந்ததை மிக அற்புதமாகத் திரைக்குக் கொண்டு வந்துள்ளார். கலை இயக்கம் அருமையாகச் செய்துள்ளார் ஐயப்பன்.

ராமர் மனதில் பட்டதை அப்படியே பேசக்கூடியவர். அவர் கடைசி சில நாட்களில் அவர் எடிட் செய்த விசயம் மிக நன்றாக இருந்தது. நடிகர்கள்  எல்லோர் நடிப்பும்  ஸ்பெஷலாக இருந்தது. பவன் டான்ஸ் அருமையாக இருந்தது. நெல்சன் இதில் வாய்ஸ் ஓவர் செய்துள்ளார். சமீபத்தில் நான் சினிமாவில் பார்த்ததில் நிஜமான மனிதர், மனதில் பட்டதைப் புண்படாமல் சொல்பவர். மாஸ்க் படம் மூலம் அவரிடம் நிறையப் பேசினேன். கவின் தான் அதற்குக் காரணம். கவின் அவருக்குத் தம்பி மாதிரி. அவர் அறிவுரை இப்படத்தில் இருக்கிறது.

சொக்கலிங்கம் நான் அஸிஸ்டெண்ட்டாக இருக்கும் போது அவர் அஸிஸ்டெண்ட் மேனேஜர். மிகவும் அர்ப்பணிப்பான உழைப்பாளி. அவர் தயாரிப்பாளராக மாறியிருப்பது மகிழ்ச்சி. ஆண்ட்ரியா இப்படத்தை ஏன் தயாரிக்கிறீர்கள் இது  நெகடிவ் பாத்திரம், இந்தக்கதை  ஏன் என்றேன். இது செய்தால் இது மாதிரி ரோல் தான் வரும் என்றேன். இப்போதும் யாரும் என்னைக் கூப்பிடவில்லை இந்தக்கதை எனக்குப் பிடித்திருக்கிறது. நான் செய்கிறேன் என்றார். இருவரும் ஜெயிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் வாழ்த்துக்கள்.

படத்தில் எல்லா கலைஞர்களும் மிகச் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். எம் ஆர் ராதா சார் ஒரு ரிபெல், அவர் நிறைய விசயங்களைப் பேசியிருக்கிறார். அவர் இந்தப்படத்திற்குள் வந்தது மிக மகிழ்ச்சி. ராதாரவி சாரிடம் அனுமதி கேட்டேன், அவர் நன்றாகக் காட்டுவீர்கள் என்றால் ஓகே என்றார் நன்றி. எம் ஆர் ராதா பேசிய விசயம் தான் இப்படத்தின் ஆன்மாவாக இருக்கிறது. குரலற்றவர்களின் குரல் தான் இந்தப்படம். எல்லோருக்கும் நன்றி” என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி ”விகர்னன் மிக அருமையாகப் பேசினார். வெற்றிமாறன் மெண்டார் என்றார்கள். பேச்சுக்கும் அவர் தான் மெண்டார் தான் போல.

இந்தப்படத்தின் டிரெய்லர் பார்த்தேன் மிக மிகப் பிடித்திருந்தது. விடுதலை ஷூட்டிங்கில் இந்தப்படம் ஆரம்பிப்பதாகச் சொன்னார். மாஸ்க் கதை, எம் ஆர் ராதா, என ஒவ்வொரு ஐடியாவும் நன்றாக இருந்தது. இந்த விழாவில் எல்லோரும் அட்டகாசமாகப் பேசினார்கள். ராமரில் ஆரம்பித்து எல்லோரும் அசத்தலாகப் பேசினார்கள். வெற்றி மாறன் மாஸ்கே இல்லாத எல்லோரையும் சமமாக நடத்தும் ஒரு மனிதர். விடுதலை ஷூட்டிங்கில் வெற்றிமாறன் சாரிடம் ராமர் மாட்டியிருப்பதாக நினைத்தேன், ஆனால் அவர் பேசியதைக் கேட்ட பிறகு தான் ராமரிடம் தான் வெற்றிமாறன் மாட்டியிருக்கிறார் எனத் தோன்றியது.

கவினுக்கு வாழ்த்துக்கள் திரையில் அவர் வசீகரமாக இருக்கிறார். அவரை திரையில் பார்க்க பிடித்திருக்கிறது. இன்று வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுப்பதில் மேலே கீழே போகலாம், ஆனால் இது தான் பயிற்சி. இது நீண்ட காலம் தாங்கும் வாழ்த்துக்கள். சின்ன வயதில் பீச்சில் சிலை பார்த்தேன் அப்புறம் ஆண்ட்ரியாவைப் பார்த்தேன் இன்னும் அப்படியே இருக்கிறார். அதே அழகு.  ருஹானி அழகாக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

ஜீவி சார் நான் எந்தப்படம் கேட்டாலும் ஒத்துக்கொண்டதே இல்லை அவர் இசை ரொம்ப பிடிக்கும் அவருடன் படம் செய்ய ஆசை வாழ்த்துக்கள். சொக்கலிங்கம் சாருக்கு வாழ்த்துக்கள். அர்ச்சனா நிறையப்  படம் நடிக்க வாழ்த்துக்கள். படம்  மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...