HomeMovie Reviewஅதர்ஸ் சினிமா விமர்சனம்

அதர்ஸ் சினிமா விமர்சனம்

Published on

மெடிக்கல் கிரைம் திரில்லரில் புதுவித குற்றத்தை பார்க்கும் வாய்ப்பு தருகிற ‘அதர்ஸ்.’

ஒரு விபத்தில் பார்வையற்ற மூன்று பெண்கள் மரணமடைய, என்ன நடந்தது என்ற விசாரணையில் இறங்குகிறார் காவல்துறை உயரதிகாரி மாதவ். அந்த பெண்கள் விபத்துக்கு முன்பே கொல்லப்பட்ட விவரம் தெரிகிறது. இன்னொரு பக்கம் செயற்கை கருத்தரிப்பு மையம் ஒன்றில் சதித்திட்டம் நடந்தேறுவதும் காவல்துறையின் கவனத்துக்கு வருகிறது.

கதை இப்படி தொடங்க, பெண்கள் கொல்லப்பட்ட விவகாரத்துக்கும் கருத்தரிப்பு மையத்தில் நடக்கும் சதிக்கும் தொடர்பு இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது. அந்த தொடர்பு என்ன என்பதை விளக்கும் அதர்ஸின் அடுத்தடுத்த காட்சிகள் முழுவதிலும் அதிர்ச்சி தொற்றிக் கொண்டிருக்கிறது…

வேகம் விவேகம் இரண்டும் கலந்த விசாரணைக்கேற்ற இயல்பான உடல்மொழி, காவல்துறை அதிகாரிக்கேற்ற கம்பீரம் என புதுமுகம் ஆதித்ய மாதவன் நடிப்பில் கணிசமாக ஸ்கோர் செய்கிறார்.

பாலினம் மாறியதால் தான் சந்தித்த அவமானங்களுக்கு, துன்புறுத்தல்களுக்கு பழிவாங்கும் நபராக சுமேஷ் மூரின் மூர்க்கத்தனம் மிரட்டுகிறது.

சில காட்சிகள் மட்டுமே என்றாலும் மருத்துவப் பணியில் துணிச்சல் மிக்கவராக தனது பங்களிப்பை பதிவு செய்திருக்கிறார் கெளரி கிஷன்.

அஞ்சு குரியன் காவல்துறை அதிகாரியாக தோரணையோடு களமாட, குறிப்பிட்டுச் சொல்லும்படியான பாத்திரத்தில் வந்துபோகிறார் நண்டு ஜெகன். ஹரீஷ் பேரடி உள்ளிட்ட மற்றவர்கள் கதைக்கேற்றபடி வலம்வருகிறார்கள்.

‘ராட்சசன்’ படத்திற்கு வழங்கியதன் இன்னொரு வெர்ஷனாக மிரளவைக்கும் பின்னணி இசையை தந்திருக்கிறார் ஜிப்ரான். பாடல்கள் மனதில் பதிய மறுக்கின்றன.

அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு கதையோட்டத்திலிருக்கும் விறுவிறுப்பின் சதவிகிதத்தை அதிகரிக்கிறது.

அடுத்து என்ன நடக்கும், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி யூகிக்க முடியாத சம்பவங்களைக் கோர்த்து மெடிக்கல் கிரைல் திரில்லரில் இதுவரையில் தமிழ் சினிமா சந்திக்காத அனுபவத்தை தந்து பாராட்டுக்குரிய இயக்குநர்கள் வரிசையில் இணைகிறார் அபின் ஹரிஹரன்.

Rating 3.5 

Latest articles

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு

https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும்...

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது!

சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு...

SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub

Integrated business destination within SPR City supports the Tamil Nadu Government's 'Perambur 2.0' initiative,...

ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கிய அல்லு அர்ஜுன்… ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு உற்சாகம்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக ரசிகர்கள் கலந்து...

More like this