HomeCinemaசினிமா எடுப்பது விவசாயத்தை விட கஷ்டம்! -தடை அதை உடை' பட விழாவில் இயக்குனர் அறிவழகன்...

சினிமா எடுப்பது விவசாயத்தை விட கஷ்டம்! -தடை அதை உடை’ பட விழாவில் இயக்குனர் அறிவழகன் முருகேசன் பேச்சு

Published on

அங்காடித்தெரு மகேஷ், திருக்குறள் குணாபாபு நடிப்பில், 1990களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவ பின்னணியில் உருவான ‘தடை அதை உடை’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய படத்தின் இயக்குநர் அறிவழகன், ”இந்த விழாவில் எல்லோரும் சிரித்துக்கொண்டிருக்கிறோம் ஆனால் எல்லோரும் இரத்தம் வரும் அளவு உழைத்துள்ளனர். அவர்கள் உழைப்பை எவ்வளவு சொன்னாலும் போதாது. எல்லா நடிகர்களுக்கும் என் நன்றியை சொல்லிக்கொள்கிறேன். என் அப்பா ஷூட்டிங்கில் இருந்தார். விவசாயத்தை விட சினிமா எடுப்பது கஷ்டமாக இருக்கிறதே என்றார். எடுப்பதே கஷ்டம் என்றால் 36 மணி நேரம் நடிப்பது எவ்வளவு கஷ்டம். அவர்களுக்கு நன்றிகள்.

எல்லோரும் சொந்த பணத்தை போட்டு எடுத்ததற்காக ஊரே திட்டிக்கொண்டிருக்கிறார்கள். உனக்கு ஏன் வேண்டாத வேலை என்றார்கள். ஜெயித்து விடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்கு காரணம் மக்களும் பத்திரிக்கையாளர்களுன் தான். நல்ல படைப்பை கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

நடிகர் குணா நன்றாக வர வேண்டும் வாழ்த்துக்கள். என் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வரும் அளவு திறமை இருக்கிறது. பயன்படுத்திக்கொள்ளுங்கள். பாடலாசிரியருக்கு சம்பளம் தரவேண்டுமே, நம் படத்தில் யாரும் என்னை கேட்கமாட்டார்கள் என நானே பாடல்கள் எழுதிவிட்டேன். அடுத்த படத்தில் புதிய பாடலாசிரியருக்கு வாய்ப்பு தருவேன். படம் 1 மணி நேரம் 53 நிமிடம் மட்டுமே. பரபரவென போகும், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். ஒரே ஒரு விசயம் சினிமாவை வாழ விடுங்கள். சினிமா பிஸினஸ் என்றால், ஒரு மாதம் சினிமா எடுக்காமல் இருந்தால் பல குடும்பங்கள் தெருவுக்கு வந்துவிடும், ஆனால் விமர்சகர்கள் படத்தை விமர்சிக்காவிட்டால் எதுவும் நடக்காது. தயவு செய்து சினிமாவை வாழ விடுங்கள். இந்தப்படம் உங்களை யோசிக்க வைக்கும், உங்கள் வாழ்க்கையை மாற்றும், அனைவரும் பாருங்கள்” என்றார்.

நடிகர் குணா பாபு, நடிகர் அருள்தாஸ், திருக்குறள் படத்தின் இயக்குநர்  ஏ ஜே பாலகிருஷ்ணன் உள்ளிடோரும் நிகழ்வில் பேசினார்கள்.

 

Latest articles

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

வெள்ளித்திரை – சின்னத்திரை – தமிழ்த் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்! -தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா...

More like this

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...