HomeMovie Reviewடியூட் சினிமா விமர்சனம்

டியூட் சினிமா விமர்சனம்

Published on

தன் காதலியை அவளது காதலனுடன் சேர்த்து வைக்க படாதபாடு படும் ஹீரோ என்ற சுவாரஸ்யமான கதையில் ‘டியூட்.’

குழந்தைப் பருவத்திலிருந்து தன்னுடன் பழகிய மாமன் மகள், திருமண வயதை எட்டிய நிலையில் தன்னைக் காதலிப்பதாக சொல்லும்போது ‘எனக்கு உன் மீது அப்படியொரு எண்ணம் இல்லை’ என்கிறார் ஹீரோ. சில மாதங்கள் கடந்துவிட, ஹீரோவுக்கு அவள் மீது காதல் உருவாகிறது. அதை அவளிடம் சொல்லும்போது, அவள் தான் இன்னொருவரை காதலிக்கும் விவரத்தை சொல்கிறாள். அதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை. ஒருவர் செட் ஆகவில்லை என்றால் வேறொரு துணையை தேடிக் கொள்வதெல்லாம் இந்த காலத்தில் சகஜம். அதனால் அவள் மீது தவறில்லை.

கதையில் பரபரப்பு இனிமேல்தான்… அவளது காதலுக்கு அவளது அப்பா எதிர்ப்பு தெரிவிக்க, அவளை அவளது காதலனுடன் சேர்த்து வைக்கும் தியாகியாக மாறுகிறார் ஹீரோ. அந்தளவுக்கு நல்லவரான அவர் காதலர்களை சேர்த்து வைப்பதற்காக எடுக்கும் நடவடிக்கைகளே படத்தின் மீதிக் கதை…

ஹீரோ பிரதீப் ரங்கநாதன் எதை செய்தாலும் ஸ்டைலாக செய்கிறார். சேட்டைகளும் அதிகம். எல்லாமே அசத்துகிறது. காதல், விரக்தி, சென்டிமெண்ட் என நடிப்பிலும் குறை வைக்கவில்லை.

நடிப்பு ராட்சசி என்ற பட்டத்தை தாராளமாக தூக்கி மமிதா பைஜுவிடம் கொடுக்கலாம். காதலோ, கோபமோ, அழுகையோ எதுவானாலும் வெளிப்படுத்த வேண்டிய உணர்வுகளுக்கேற்ப உடனுக்குடன் மாறும் அவரது முகபாவங்களும் நடிப்பில் பிரதிபலிக்கும் புத்துணர்ச்சியும் காட்சிகளுக்கு பெரும் பலம்.

ஹீரோயினின் அப்பாவாக சரத்குமார். மாபெரும் பணக்காரர், இந்தியா முழுக்க செல்வாக்குள்ள அரசியல்வாதி, தமிழ்நாட்டின் அமைச்சர் என பல விதங்களில் கெத்து காட்டுகிற கதாபாத்திரம். கலகலப்பான பேச்சு, ஆட்டம் பாட்டம் என்றிருப்பவர் மகளின் சாதி மாறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போதும் அடுத்தடுத்த செயல்பாடுகளிலும் வில்லத்தனத்தை பொருத்தமான வீரியத்தோடு பரிமாறுகிறார்.

ஹீரோயினின் காதலராக ஹ்ருது ஹரூன், ஹீரோவின் அம்மாவாக ரோகிணி, நண்பராக டிராவிட் செல்வம் என மற்றவர்கள் கதையின் தேவையை நேர்த்தியாக பூர்த்தி செய்திருக்க,

சாய் அபயங்கர் இசையில் உருவான பாடல்களில் உற்சாகம் தெறிக்கிறது. ‘என் பேச்சவ மூச்சவ’ இளையதலைமுறையின் காதல் கீதமாகியிருக்கிறது. நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு படத்தை பிரமாண்டமாக்கியிருக்கிறது.

கொஞ்சம் கனமான, ஏடாகூடமான கதையை எடுத்துக் கொண்டு, Gen z தலைமுறையைக் கவரும் விதத்தில் காமெடி களேபரங்களோடு திரைக்கதையாக்கி படத்தை சூப்பர் ஹிட் லிஸ்டில் சேர்த்திருக்கிற இயக்குநர் கீர்த்தீஸ்வரன், ஆணவக் கொலையை கண்டித்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது.

Rating 3.5 / 5

Latest articles

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

வெள்ளித்திரை – சின்னத்திரை – தமிழ்த் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்! -தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா...

More like this

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...