HomeCinemaஜட்ஜாக சோனியா அகர்வால் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்! -வில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் எஸ் சிவராமன் பேச்சு 

ஜட்ஜாக சோனியா அகர்வால் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்! -வில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் எஸ் சிவராமன் பேச்சு 

Published on

சோனியா அகர்வால், விக்ராந்த் நடிப்பில், எஸ் சிவராமன் இயக்கத்தில் முழுமையான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் ‘வில்.’

இந்த படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய இயக்குநர் சிவராமன், ”இந்த திரைப்படம் உருவாகக் காரணம் என் எடிட்டர் தினேஷ் தான். அவரிடம் கோர்டில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைப் பற்றிச் சொன்ன போது, சார் இதைப் படமாக்கலாம் என்றார்.

ஜட்ஜாக நடிக்க யாரை அணுகலாம் என நினைத்த போது சோனியா அகர்வால் மேடம் ஞாபகம் வந்தது, மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். சோனியா அகர்வால் சகோதரர் சௌரப் அகர்வால் இசை கற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்து, அவரை இப்படத்தில் அறிமுகம் செய்தேன். மிக அற்புதமாக இசையைத் தந்துள்ளார்.

இப்படம் உயில் சம்பந்தப்பட்டது, உயில் பல குடும்பங்களில் பிரச்சனையாக அமைந்துள்ளது. இது பற்றிய விழிப்புணர்வு தரும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.

எடிட்டர் லெனின் சார் படம் பார்த்து என்னைப் பாராட்டினார் அதுவே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. கண்டிப்பாக மக்கள் இப்படத்தை ரசிப்பார்கள் என நம்புகிறேன்.

விக்ராந்த் இன்வஸ்டிகேடிவ் ஆபீஸராக நடித்துள்ளார். அலிகியா எல்லோரும் செய்யத் தயங்கிய ரோலில் சிறப்பாக நடித்தார் அவருக்கு நன்றி. இது அடிதடி, துப்பாக்கி எல்லாம் வரும் ஆக்சன் படமல்ல. ஃபீல் குட் படம். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார்.

நடிகை சோனியா அகர்வால் ”இந்தப்படம் எனக்கு மிக முக்கியமான படம். எனது தம்பி சௌரப் அகர்வால் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். என்னைப்போல அவருக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள். சிவராமன் சாருடன் ஏற்கனவே தனிமை படம் வேலை பார்த்துள்ளேன். மக்களின் தினசரி வாழ்க்கையிலிருந்து கதை சொல்வார். அவரே வழக்கறிஞராக இருந்தவர். இந்தக்கதையை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார்.

விக்ராந்துடன் வேலை பார்த்தது நல்ல அனுபவம். இப்படம் மிக நன்றாக வந்துள்ளது. சின்னப்படம் பெரிய படம் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, காதல் கொண்டேன் 1 கோடியில் எடுத்து பிளாக்பஸ்டர் ஆனது. மக்களுக்கு எந்த கதை பிடிக்கும் என்பது அவர்களுக்குத் தான் தெரியும். இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார்.

நடிகை அலீகியா ”திரையுலகிற்கு நான் புதியவள். இந்த வாய்ப்பைத் தந்த இயக்குநர் சிவராமன் அவர்களுக்கு நன்றி. சோனியா மேடம் கூட நடித்தது நல்ல அனுபவம். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது” என்றார்.

Latest articles

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=K7zjRJ_0sgk   நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்: பகுதி 1’ திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிகாரப்பூர்வ டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. உலகம்...

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு

https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும்...

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது!

சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு...

SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub

Integrated business destination within SPR City supports the Tamil Nadu Government's 'Perambur 2.0' initiative,...

More like this