HomeCinema'ரஜினி கேங்' படத்தின் புதுமையான ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களின் வரவேற்பு குவிகிறது!

‘ரஜினி கேங்’ படத்தின் புதுமையான ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களின் வரவேற்பு குவிகிறது!

Published on

ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, எம் ரமேஷ் பாரதி இயக்கியுள்ள கலக்கலான ஹாரர் காமெடி திரைப்படம் ‘ரஜினி கேங்.’

இந்த படத்தின் புதுமையான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஊரை விட்டு ஓடிப்போகும் ஒரு காதல் ஜோடி, கல்யாணம் செய்துகொள்ளும் நிலையில், அவர்கள் எதிர்பாராத விதமாக சந்திக்கும் அமானுஷ்ய அனுபவங்கள், அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் என கலகலப்பான திரைக்கதையில், கமர்ஷியல் ஹாரர் காமெடியாக இந்த படம் உருவாகியுள்ளது.

ரஜினி கிஷனுக்கு ஜோடியாக திவிகா நடித்துள்ளார். மொட்டை ராஜேந்திரன், ராம் தாஸ், கூல் சுரேஷ், கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ப்ளூ எனும் நாய் படம் முழுக்க முக்கிய கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளது.

பொறியாளன், போங்கு, சட்டம் என் கையில் போன்ற படங்களின் இசையமைப்பாளர் எம் எஸ் ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் நான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து 2.5 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

படப்பிடிப்பு சென்னையின் படப்பை, மறைமலைநகர் போன்ற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வருட இறுதியில் இப்படத்தைத் திரைக்குக் கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த படத்தை இயக்கியுள்ள எம் மேஷ் பாரதி பிஸ்தா திரைப்படம், உப்பு புளி காரம், கனா காணும் காலங்கள் உள்ளிட்ட வெப் சீரிஸ்களை இயக்கியவர்.

MISHRI ENTERPRISES மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக திரைப்பட பைனான்ஸ், விநியோகம் மற்றும் தயாரிப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் ஆக்சன் கிங் அர்ஜூன் நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்ற ‘ஜெய்ஹிந்த்’ சில வருடங்கள் முன் வெளியான ‘அஷ்டகர்மா’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படம் மூன்றாவது தயாரிப்பாக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

Latest articles

பல மருத்துவத் துறைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் ஹெர் (HER) பெண்கள் நலன் மற்றும் நீண்ட ஆயுள் மாநாடு!

Be The One Longevity Centre நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கிளினிக்கல் இயக்குநரான டாக்டர் இர்ஃபானா ஹமீத், பெண்களின்...

இரா.சரவணன் இயக்கத்தில் அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2.’

‘நந்தன்’ திரைப்படத்தின் மூலம் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் இரா. சரவணன், தனது...

என்னுடைய நடிப்பை தயாரிப்பு தரப்பு சிறப்பு என பாராட்டியிருக்கிறார்கள்! -சிக்மா பட விழாவில் நடிகர் சந்தீப் கிஷன் உற்சாகம்

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா...

கூல் சுரேஷ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்க, வந்தை பிரேம் இயக்கும் ‘மறுஜென்ம காதல்’ படம் பூஜையுடன் துவக்கம்!  

வந்தை பிரேம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் 'மறுஜென்ம காதல்' திரைப்படத்தின் தொடக்க விழாவில், சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க...

More like this