HomeCinemaகேமிங் & லோன்... வரமாகவும் சாபமாகவும் மாறியிருக்கிற மக்களின் ஆன்லைன் ஈடுபாட்டை மையக்கருவாக வைத்து உருவான...

கேமிங் & லோன்… வரமாகவும் சாபமாகவும் மாறியிருக்கிற மக்களின் ஆன்லைன் ஈடுபாட்டை மையக்கருவாக வைத்து உருவான ‘கேம் ஆஃப் லோன்ஸ்’ தீபாவளி கொண்டாட்டமாக ரிலீஸாகிறது!

Published on

அறிமுக இயக்குநர் அபிஷேக் லெஸ்லி இயக்கியுள்ள இந்த படம் வரும் அக்டோபர் 17-ம் தேதி, தீபாவளி கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ளது.

தற்போதைய நவீன உலகில் எதை வேண்டுமானாலும் ஆன்லைனில் வாங்கிக்கொள்ளும், சாதித்துக்கொள்ளும் பழக்கம் வழக்கமாகிவிட்டது. ஆன்லைன் எந்தளவுக்கு வரமாக உள்ளதோ, அதே போல் ஒரு பக்கம் சாபமாகவும் இருக்கிறது. இதுதான் படத்தின் மையக்கரு.

வழக்கமான பாடல், ஃபைட், காமெடி என எந்த அம்சங்களும் இல்லாமல் முழுக்க வித்தியாசமான திரைக்கதையில், சுவாரஸ்யமான வகையில் 90 நிமிட கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு முழுக்க முழுக்க பெங்களூரில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

நாயகனாக நிவாஸ் ஆதித்தன் நடித்துள்ளார். அபிநய் எதிர்மறை பாத்திரத்தில் வில்லனாக கலக்கியுள்ளார். எஸ்தர், ஆத்விக் உடன் குழந்தை நட்சத்திரம் ஆத்விக் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படம் குறித்து இயக்குநரிடம் கேட்டபோது, லாக்டவுன் காலத்தில் தான் இப்படத்தின் கரு எனக்கு தோன்றியது. நான் ஐடியில் வேலை பார்ப்பவன், ஏஐ யிடம் ஒருவன் மாட்டிக்கொண்டால் என்னாகும் என குறும்படம் எடுத்தேன், அது கான்ஸ் திரை விழாவில் கலந்துகொண்டு விருது வென்றது.

லாக்டவுன் காலத்தில் ஆன்லைன் கேமிங் ஆன்லைன் லோன் என பலர் சிக்கிக்கொள்வதை தினமும் கேள்விப்பட்டேன். என் நண்பர்கள் பலரே இதில் மாட்டியிருக்கின்றனர். இதைப்பற்றிய விழிப்புணர்வு தரும் வகையில் ஏன் ஒரு படம் செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் உருவானது தான் இப்படம்.

ஆன்லைன் லோன் வாங்குவது இன்றைய காலகட்டத்தில் மிக மிக எளிதானது ஆனால் அதை திருப்பிக்கட்டுவது என்பது மிகப்பெரிய சிக்கலாக மாறியிருக்கிறது. அப்படி ஆன்லைன் கேமுக்கு அடிமையாகி, லோன் வாங்கி சிக்கலில் மாட்டிக்கொள்ளும் ஒருவன், காலை முதல் மாலை வரை ஒரு நாளில் சந்திக்கும் பிரச்சனைகள் தான் இந்தப்படம். ஒரு கதைக்குப் பாடல்களோ காமெடியோ முக்கியமில்லை. மக்களைக் கதைக்குள் இழுக்கும் அவர்கள் அதை தங்களோடு தொடர்பு படுத்திக்கொள்ளும் அம்சம் இருந்தாலே போதும். எப்போதும் சுவாரஸ்யமான திரைக்கதை தான் முக்கியம்.

குறைந்த கதாபாத்திரங்கள் என்றாலும் கதைக்கு என்ன தேவையோ அதைச் சரியாகச் செய்திருக்கிறோம். எல்லோரும் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் கடன் வாங்கியிருப்பார்கள் இந்தப்படம் பார்க்கும் போது இதை தங்கள் கதையாக உணர்வார்கள். கண்டிப்பாக மக்கள் ரசித்துப்பார்க்கும் ஒரு படமாக இப்படம் இருக்கும்” என்றார்.

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this