HomeMovie Reviewமரியா சினிமா விமர்சனம்

மரியா சினிமா விமர்சனம்

Published on

சர்ச்சைக்குரிய விஷயங்களை சுமந்திருக்கும் ‘மரியா.’

கிறிஸ்துவ மத துறவியான கன்னியாஸ்திரி மரியா சில நாட்கள் உறவுக்காரப் பெண் வசிக்குமிடத்தில் தங்குகிற சூழ்நிலை உருவாகிறது. அங்கு நடக்கும் சில விஷயங்களால் அவளது காம உணர்ச்சி துண்டப்படுகிறது; கன்னியாஸ்திரிகள் அணியக்கூடாத நவநாகரிக உடைகளை அணிந்துகொள்ளும் விருப்பம் உருவாகிறது.

விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளவும், காம உணர்ச்சியை தீர்த்துக் கொள்ளவும் தயாராகிறாள். கன்னியாஸ்திரி எதையெல்லாம் செய்யகூடாதோ அதையெல்லாம் செய்கிறாள். அதனால் அவள் சந்திக்கும் பிரச்சனைகள் காட்சிகளாக விரிய, அவள் சாத்தான் வழிபாட்டை நோக்கி நகர்கிற சம்பவங்களும் நடக்கின்றன. அதெல்லாம் நமக்கு புதிதாக இருக்கின்றன. கிளைமாக்ஸ் ஒருவித அதிர்வை உருவாக்குகிறது… இயக்கம்: ஹரி சுதன்

மரியாவாக சாய்ஸ்ரீ பிரபாகரன். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி வாழ்வதிலிருக்கிற மன உளைச்சலை, காம உணர்வு பெருக்கெடுக்கும் தருணங்களை, விரும்பியதை செய்கிற போது கிடைக்கிற உற்சாகத்தை, உணர்ச்சியைத் தீர்த்துக்கொள்கிறபோது பெறுகிற சுகத்தை முகபாவங்களில் துல்லியமாக பிரதிபலித்திருக்கிறார். அந்த நடிப்புக்காகவும், சர்ச்சைக்குரிய கேரக்டரை துணிச்சலாக ஏற்றிருப்பதற்காகவும் பாராட்டுக்களைப் பரிசளிக்கலாம்.

மரியாவின் உறவுக்காரப் பெண்ணாக வருகிற சித்து குமரேசன், கன்னியாஸ்திரிக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக கடைப்பிடித்துக் கொண்டிருந்த மரியா திடீரென அந்த கட்டுப்பாடுகளை விட்டு விலகி சராசரிப் பெண் போல் மாறுவதைப் பார்த்து அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என குழம்பித் தவிப்பது, தன்னுடன் இணைந்து வாழ்கிற ஆணுக்கும் மரியாவுக்கும் இருக்கும் நெருக்கத்தைக் கண்டு ஆத்திரத்தின் உச்சத்துக்கு போவது என நீளும் காட்சிகளில் வெளிப்படுத்தும் உணர்வுகளுக்குப் பொருத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார்.

சாத்தான் வழிபாடு, அதன் பின்னணி, அதன் நோக்கம் என பல விஷயங்களை எடுத்துச் சொல்கிறவராக படத்தின் முக்கியத்துவம் பெறுகிற காட்சிகளில் வந்துபோகிறார் பாவல் நவகீதன்.

மரியாவின் உணர்ச்சிகளை தூண்டுபவராக, உணர்ச்சிக்கு தீனி போடுபவராக விக்னேஷ் ரவியின் நடிப்பில் தன் கதாபாத்திரத்துக்கு தேவையான துடிப்பு தெரிகிறது.

பாலாஜி வேலன், சுதா புஷ்பா, அபிநயா என மற்றவர்களின் நடிப்போடு ஒளிப்பதிவு, பின்னணி இசை உள்ளிட்டவையும் படத்தை தாங்கியிருக்கின்றன.

கன்னியாஸ்திரி ஒருவர் மதக்கட்டுப்பாடுகளை மீறி சராசரி வாழ்க்கைக்குள் செல்வதாக ‘மரியா’வை உருவாக்கியிருக்கும் இயக்குநருக்கு, ‘பெண்களை கட்டுப்பாடுகளுக்குள் முடக்குவது சரியா’ என கிறிஸ்தவ மதத்தைப் பார்த்து கேள்வியெழுப்புவது நோக்கமாக இருக்கலாம். அதை கலைப் படைப்பான திரைப்படம் மூலம் கேட்பது சரியாகவும் இருக்கலாம். அதற்காக, காட்சிகளில் ஆபாசத்தை திணித்திருப்பதை சரியென எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாது!

Rating 2 /5 

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this