HomeCinemaமுழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் உருவாகும் 'அறுவடை' படத்தின் பரபரப்பு கிளப்பிய ஃபர்ஸ்ட் லுக்!

முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் உருவாகும் ‘அறுவடை’ படத்தின் பரபரப்பு கிளப்பிய ஃபர்ஸ்ட் லுக்!

Published on

சமீபத்தில் வெளிவந்த ‘லாரா’ திரைப்படம் உருவாக்கப்பட்ட விதம் ஊடகங்களால் பாராட்டப்பட்டது. பட்ஜெட் படங்களில் எதிர்பாராத வகையில் சிறு ஆச்சரியம் அளித்த படம் என்று பத்திரிகைகள் எழுதின. வணிக ரீதியாகவும் அந்த படம் வெற்றி பெற்றது. அதையடுத்து அதே தயாரிப்பாளர் ‘அறுவடை’ என்கிற பெயரில் புதிய படத்தை தயாரித்து இயக்குகிறார். ஏற்கெனவே ‘லாரா’ படத்தில் கம்பீரமான பாத்திரத்தில் நடித்திருந்ததை போலவே இந்த படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் தொடக்க விழா சமீபத்தில் கோவையில் நடைபெற்று, படப்பிடிப்பு துவங்கியது. கோவை, கோபிசெட்டிப்பாளையம், பவானி, பொள்ளாச்சி பகுதிகளில் முருகன் என்ற புதிய படக் குழு உருவாக்கப்பட்டு  முதல் கட்டப் படப்பிடிப்பு நடக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார். ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

படம் முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் கிராமத்து மண்ணையும், மனிதர்களையும், அவர்களது வாழ்வியலையும், பல விதப்பட்ட மனித உணர்வுகளையும் பதிவு செய்யும் விதமாக உருவாகி வருகிறது.

ஒளிப்பதிவு _ ஆனந்த், இசை – ரகு ஸ்ரவண் குமார், படத்தொகுப்பு கே .கே . விக்னேஷ், பாடல்கள் – கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன், கானா சக்தி, சண்டைப் பயிற்சி – TK , நடனம் – ஏ. எம். ஜே.

Latest articles

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

வெள்ளித்திரை – சின்னத்திரை – தமிழ்த் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்! -தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா...

More like this