HomeCinemaதிரைப்பயணத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம்... முதல்முறையாக தேசிய விருது பெற்றார் நடிகர் ஷாரூக் கான்!

திரைப்பயணத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம்… முதல்முறையாக தேசிய விருது பெற்றார் நடிகர் ஷாரூக் கான்!

Published on

நடிகர் ஷாரூக் கான், தனது 2023 வெளியீடான ‘ஜவான்’ திரைப்படத்திற்காக, நாட்டின் மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றான தேசிய விருதில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக திரை உலகில் சாதனை படைத்துவரும் ஷாரூக், தனது முதலாவது தேசிய விருதை இப்போது வென்றிருப்பது, அவரது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக, மிகப்பெரும் கௌரமாக அமைந்துள்ளது.

“ஜவான்” படத்தில் தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 71வது தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற ஷாரூக்கான், ஜவான் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். ஆக்சன் காட்சிகளிலிருந்து உணர்ச்சிபூர்வமான நடிப்புவரை, பல்வேறு விதமான வேடங்களில் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்திய ஷாரூக், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் மனதையும் கவர்ந்திழுத்துள்ளார். இவ்விருது அவரது திரைப்பயணத்திற்கு மிக உரிய பெருமையாகும்.

சமீபத்தில், தனது மகன் ஆர்யன் கானின் இயக்கிய அறிமுகப்படைப்பு The Ba***ds of Bollywood சீரிஸில், சிறப்பு தோற்றத்தில் நடித்தார் ஷாரூக்கான். அடுத்ததாக, சித்தார்த் ஆனந்த் இயக்கும் King திரைப்படத்தில் மகள் சுஹானாகானுடன் இணைந்து நடிக்க உள்ளார். 2026-இல் வெளியாகவுள்ள இந்தப் படத்தில், ஷாரூக்கான் மற்றும் தீபிகா படுகோனே இணையும் காட்சிகளும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் தேசியவிருது பெற்றதை, ரசிகர்கள் மிக உற்சாகமான கொண்டாடி வருகின்றனர்.

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this