HomeCinemaஇது மக்கள் சார்ந்த அரசியல் படம்; நீங்கள் எந்த மாதிரியான எதிர்பார்ப்பில் வந்தாலும் உங்களின் எதிர்பார்ப்பை...

இது மக்கள் சார்ந்த அரசியல் படம்; நீங்கள் எந்த மாதிரியான எதிர்பார்ப்பில் வந்தாலும் உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்! -‘சக்தித் திருமகன்’ படத்தின் முன் வெளியீட்டு விழாவில் இயக்குநர் அருண் பிரபு

Published on

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘சக்தித் திருமகன்’ படத்தின் முன் வெளியீட்டு விழா 10.09.2025 அன்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய விஜய் ஆண்டனி, ”இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக வருகை தனத அனைவருக்கும் நன்றி. இப்போது தான் 25 படங்கள் நடித்தது போல் இல்லை, நேற்று தான் “நான்” படத்தில் நடித்தது போல் உள்ளது.

25 படங்கள் என்பது நான் நாயகனாக நடித்த படங்களை மட்டும் குறிப்பிடவில்லை, நான் சிறு கதாபாத்திரங்களில் நடித்த படங்களையும் சேர்த்து தான் 25 வது படம் என்று குறிப்பிட்டுள்ளோம்.

அருண் அவர்களின் இயக்கத்தில் நடிப்பேன் என்று தெரியாமலே எனக்கு பிடித்த படம் “அருவி” என்று சொல்லியிருக்கிறேன். ஆனால், நீங்கள் எனக்கு மெசேஜ் செய்யும் போது நான் நம்பவே இல்லை. அவர் கதை சொல்லும் போது அவரை மலைத்து பார்த்துக் கொண்டிருந்தேன். முதல் பாதி சொல்லும் போது இப்படத்தின் பட்ஜெட் மிக அதிகம் என்று உணர்ந்தேன். நான் எப்போதும் மீடியம் பட்ஜெட் படங்களை தான் நடித்து வந்துள்ளேன். ஆனால் இப்படத்தின் இரண்டாம் பாதியை கேட்டவுடன் பிரமித்துவிட்டேன். ஏனென்றால், இரண்டாம் பாதி முழுக்க முழுக்க அரசியல் களத்தில் உள்ளது.

பெரிய பட்ஜெட், அரசியல் படம் என்று யோசனை வந்தாலும், இப்படத்தை நடித்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். 4 வருடம் எனக்காக காத்திருந்து ஒரு கதை அமைத்ததற்கு பிரபுவிற்கு நன்றி.

இப்படத்தை என் சில நண்பர்களுக்கு காட்டினேன், அவர்களிடம் இவர் மறைமுகமாக ஏதேனும் குறியீடு வைத்திருக்கிறாரா? என்று கேட்டேன். அவர்கள் அப்படி ஒன்றும் இல்லை, நேரடியாகவே சொல்லியிருக்கிறார் என்றார்கள். அது எந்தக் கட்சியாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன், எப்படி இருந்தாலும் இப்படம் ஒரு கலை வடிவத்தில் தானே உள்ளது என்றேன். அந்த அளவிற்கு அழுத்தமான ஒரு படத்தை இயக்கியுள்ளார் அருண் பிரபு.

பிரபு மற்றும் ஷெல்லியின் காம்பினேஷன் இப்படத்தை வேறு ஒரு தளத்திற்கு உயர்த்தியுள்ளது. அவர்கள் இருவரும் இணைந்து பல படங்கள் பணியாற்ற வேண்டும் என்று கேடுகொள்கிறேன்.

நூறு சாமி படம் மே மாதம் 1 ஆம் தேதி வெளியாகும். அப்படம் பிச்சைக்காரன் படத்தை விட பெரிய ஹிட்டாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மேலும் பல புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக விஜய் ஆண்டனி பிலிம்ஸ் கார்பரேஷன் பிரைவேட் லிமிடெட் – ஆக இருந்த இந்த நிறுவனம் 2027 ஆம் ஆண்டு முதல் பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக மாற உள்ளது.

அனைவரும் செப்டம்பர் 19 ஆம் தேதி சக்தித் திருமகன் படத்தை பார்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன், நன்றி” என்றார்.

இயக்குனர் அருண் பிரபு, ”இங்கு பேசிய அனைவரும் பெரிய வார்த்தைகள் கூறினார்கள், அவர்களுக்கு நன்றி. இப்படத்தை 19ம் தேதி திரையரங்கிற்கு வந்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

இது மக்கள் சார்ந்த ஒரு அரசியல் படம். நீங்கள் எந்த மாறியான எதிர்பார்ப்பில் வந்தாலும், இப்படம் உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்.

விஜய் ஆண்டனி சார் நடித்த மற்ற படங்களை இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பு மாறுபட்டு இருக்கும்” என்றார்.

நடிகர் அஜய் தீஷன் ”சிறு வயதிலிருந்து விஜய் ஆண்டனி சாரை பார்த்து வளரக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. அப்படி இருக்க, அவரின் 25 வது படத்தின் மேடையில் நான் நிற்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. பொதுவாக நான் விஜய் ஆண்டனி சார் நடிக்கும் படங்களை பார்த்துவிடுவேன். அதே போல் சக்தித் திருமகன் படத்தை பார்த்துவிட்டு, “என்ன சார் பண்ணிருக்கீங்க” என்று கேட்டேன். அவர் ஒன்றும் புரியாமல் என்னை பார்தார், நான் நன்றாக உள்ளது என்கிறேனா? இல்லையா? என்று அவருக்கு புரியவில்லை.

விஜய் ஆண்டனி மிகவும் சாதுவான ஒருவர், அவர் இப்படி ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்றால் அதை என்னால் நம்பவே முடியவில்லை.

அருண் பிரபு சாருக்கு நான் மிகப்பெரிய ரசிகன், அருவி படத்தை நான் பள்ளியில் படிக்கும் போது பார்த்தேன், வாழ் படத்தை சென்ற வருடம் பார்த்தேன். இரண்டு படங்களும் என்னை ஏதோ செய்துவிட்டது. அவர் விஜய் ஆண்டனி சாருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்சியாக உள்ளது.

விஜய் ஆண்டனி சாரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், நான் இந்த துறைக்கு புதிது, 5 வருடங்களாக தான் திரைத்துறையில் இருக்கிறேன். சாருடன் இணைந்து பணியாற்றி, உதவி இயக்குனராக பணிபுரிந்து, இப்போது நடிகராகியுள்ளேன்.

ஆனால், இந்த துறையில் பலரால் சாதிக்க முடியாமலும், இயக்கிய படங்களை வெளியிட முடியாமலும், அதை மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியாமலும் தவிக்கும் கஷ்டத்தை சமீபமாக தான் புரிந்துக் கொண்டேன். ஆனால், அதை தனது 25 படங்களுக்கும் சரியாக செய்து வரும் விஜய் ஆண்டனி அவர்களை பார்கும் போது பிரம்மிப்பாக உள்ளது.

அவர் ஒரு படத்தை பொருளாக பார்க்காமல்,  குழந்தையாக பார்ப்பார், அதை சுமக்கும் இயக்குனரை தாயாக பார்ப்பார். அப்படிபட்ட ஒரு தயாரிப்பாளருடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து இன்னும் பல படங்களில் நான் பணியாற்ற வேண்டுமென விரும்புகிறேன்.

சக்தித் திருமகன் சிறப்பாக வந்துள்ளது, இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறும், நன்றி” என்றார்.

இப்படம் விஜய் ஆண்டனியின் 25வது படம். இப்படத்தை அருவி படத்தின் இயக்குனர் அருண் பிரபு இயக்கியிருக்கிறார். இசையை விஜய் ஆண்டனியே அமைத்திருக்கிறார். ஷெல்லி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதாநாயகி திருப்தி நடிகையாக அறிமுகமாகிறார். இந்த விழாவிற்கு விஜய் ஆண்டனியை இயக்குனர்கள் திரளாக வந்து தங்களது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்கள்.

 

 

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...