HomeMovie Reviewலோகா: சாப்டர் 1 சந்திரா சினிமா விமர்சனம்

லோகா: சாப்டர் 1 சந்திரா சினிமா விமர்சனம்

Published on

வாம்பைர், டிராகுலா என ஹாலிவுட் படங்களில் சூப்பர் ஹீரோக்களை விதவிதமாக பார்த்துள்ள நமக்கு, அதே பாணியில் மலையாள திரையுலகிலிருந்து சூப்பர் ஹீரோயினை பார்க்கிற வாய்ப்பு.

அந்த பரபரப்பான நகரத்தில் உறுப்புகளுக்காக மனிதர்களைக் கடத்துகிற ஒரு கும்பல் இளம்பெண் சந்திராவை கடத்துகிறது. சந்திராவை விரும்புகிற இளைஞன் பதறிப் போகிறான். கடத்தியவர்களை அவள் கொடூரமாக தாக்கிக் கொல்கிறாள். அதை பார்த்த பிறகு அவள் சாதாரண பெண்ணில்லை; அவள் அதித சக்தி கொண்ட பெண் என்பது அந்த இளைஞனுக்கு தெரிகிறது.

கதை இப்படி சூடு பிடிக்க அந்த பெண் யார்? எதற்காக வந்திருக்கிறாள்? என்பதை எடுத்துச் சொல்லும் காட்சிகளோடு படத்தில் பரபரப்பு தொற்றுகிறது…

சந்திராவாக வருகிற கல்யாணி பிரியதர்ஷன் இளமையான தோற்றத்தால் வசீகரித்து அதிரடி ஆக்சனில் சூப்பர் ஹீரோவாக சுழன்றடித்து ஆச்சரியப்படுத்துகிறார்.

சந்திராவை சாதாரண பெண் என நினைத்து காதல் வசப்பட்ட நிலையில் பொழுதைக் கழிப்பதும், அவள் வினோதமானவள் என தெரிந்து தலை சுற்றி விழுவதுமாக தன் பங்களிப்பை ரசிக்கும்படி தந்துள்ளார் நஸ்லென்.

வில்லனாக டான்ஸ் மாஸ்டர் சாண்டி தன் பங்கிற்கு மிரட்டியிருக்கிறார்.

நஸ்லெனின் நண்பர்களாக வருகிறவர்களின் நடவடிக்கைகள் சிரிப்பூட்டுகின்றன.

துல்கர் சல்மான் (இந்த படத்தின் தயாரிப்பாளர்), டொவினோ தாமஸ் என பெரிய பெரிய நடிகர்கள் கேமியோவாக வந்தாலும் அவர்களும் அடிதடி அதிரடியால் கவனம் பெறுகிறார்கள்.

ஜேக்ஸ் பிஜாய் காட்சிகளுக்குப் பொருத்தமான பின்னணி இசையை வழங்கியிருக்க, ஒளிப்பதிவால் படத்தை பிரமாண்டமாக மாற்றியிருக்கிறார் நிமிஷ் ரவி.

கெட்டவர்களை ஒழிக்க வந்த சக்தியாக சந்திராவை உருவாக்கிய இயக்குநர் டோம்னிக் அருண் அடுத்த பாகத்தை நீலியின் வேட்டையால் அட்டகாசப்படுத்த போகிறார். அந்த நீலி யார் என்பதை இந்த பாகத்திலேயே காண்பித்து ஹைப் ஏற்றியிருக்கிறார்.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this