HomeCinemaசிரஞ்சீவி, பிளாக்பஸ்டர் இயக்குநர் பாபி கொல்லி இணையும் ‘வால்டர் வீரய்யா' படத்தின் அசத்தல் போஸ்டர் வெளியானது!

சிரஞ்சீவி, பிளாக்பஸ்டர் இயக்குநர் பாபி கொல்லி இணையும் ‘வால்டர் வீரய்யா’ படத்தின் அசத்தல் போஸ்டர் வெளியானது!

Published on

பிளாக்பஸ்டர் கூட்டணியான மெகாஸ்டார் சிரஞ்சீவி மற்றும் வெற்றி இயக்குநர் பாபி கொல்லியின் கூட்டணி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. மெகாஸ்டாரின் பிறந்த நாளை முன்னிட்டு,  இருவரும் இணையும் இந்த மெகா-ப்ராஜெக்ட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக  ‘வால்டர் வீரய்யா’ படத்தில் விண்டேஜ் மெகாஸ்டார் அனுபவத்தை ரசிகர்களுக்குத் தந்து இந்தக்  கூட்டணி வசூல் சாதனை படைத்தது.  இந்த புதிய திரைப்படத்தினை KVN Productions தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.

மெகாஸ்டாரை ஒரு  மாஸான கதாபாத்திரத்தில் காட்டும் திறன் கொண்ட இயக்குநரான பாபி, இந்த புதிய படத்துக்கு “The blade that set the bloody benchmark” என்ற டேக்லைன் உடன் ஒரு வலுவான கான்செப்ட் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.  ஒரு சுவரை கோடாரி பிளக்கும் இந்த அறிவிப்பு போஸ்டர்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகர் சிரஞ்சீவியை முன்னெப்போதும்  இல்லாத ஒரு புதுமையான கதாப்பாத்திரத்தில் காட்டவுள்ளதாக இயக்குநர்  பாபி உறுதியளித்துள்ளார். போஸ்டர் மற்றும் டேக்லைன் படி, இப்படம் தெலுங்கு சினிமாவிற்கே புதிய அளவுகோல் அமைக்கப் போகிறது.

KVN Productions, நிறுவனம் தளபதி விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’, ‘டாக்ஸிக்’, ‘பாலன்’ என இந்தியாவே எதிர்பார்க்கும் பல பிரம்மாண்ட படைப்புகளைத் தயாரித்து வருகிறது. பல பிளாக்பஸ்டர்  ஹிட் படங்களை தந்து, இந்திய சினிமாவில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அதிகம் பேசப்படும் தயாரிப்பு நிறுவனமாக மிக வேகமாக வளர்ந்து வருகிறது KVN Productions. மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் இந்த  பிரம்மாண்ட படம்  மூலம் KVN Productions நிறுவனம்  தெலுங்கு சினிமாவில் கால் பதித்து உருவாக்கும் முதல் முயற்சியாக அமைந்துள்ளது.

படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் இறுதியில் துவங்கவிருக்கிறது. பலத்த  எதிர்பார்ப்புகளைக் கிளப்பியுள்ள இப்படத்தின் மற்ற விபரங்களைத் தயாரிப்பாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this