HomeCinemaவெற்றி நடிக்கும் 'பிளாக் கோல்டு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

வெற்றி நடிக்கும் ‘பிளாக் கோல்டு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Published on

வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, ஏ.வெங்கடேஷ், அருள் டி சங்கர், விஜய் டிவி ராமர் உள்ளிட்டோர் நடிக்க, பரபரப்பான ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் ‘பிளாக் கோல்டு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

படித்த யதார்த்த இளைஞன் போல இருக்கும் நடிகர் வெற்றி, ஆக்ரோசமாக, ரத்தம் தெறிக்க ஒரு எதிரியை வாட்டர் பம்ப் பிளேயர் ரிங்கால் அடித்து வீழ்த்துவதுபோல் உள்ளது.

நடிகர் வெற்றியின் ஆக்ரோசமான முகமும், பின்னணியில் கதவு திறந்த நிலையில் இருக்கும் சரக்கு கண்டைனரும் காட்சியின் வீரியத்தை காட்டுகிறது. அனைவரது கவனத்தையும் ஈர்த்து இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. வெற்றி முன்பு எப்போதும் இல்லாத தோரணையில் புதுமையாகயும், இளைமையாகவும் இருக்கிறார்.

ஒரு படித்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞன் தன் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு இழப்பிற்க்கு பதில் தேடி எந்த அளவிற்கு துணிகிறான் என்பதே இப்படத்தின் கதைக்கரு. நம் வாழ்வில் சாதாரணமாக இருக்கும் சிறு விசயம் ஒன்று, எப்படி உலக வர்த்தகமாகி இருக்கிறது, அதன் பிண்ணனியில் இருக்கும் நிழல் உலக மாபியாக்கள் பற்றி கூறும் இப்படத்தை பரபரப்பான திரைக்கதையில் அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகி உள்ளது.

ஒரு சாதாரண நடுத்தர இளைஞனுக்கும் மிகப்பெரிய வணிக மாபியாக்களுக்கும் இடையே நடக்கும் அனல் தெறிக்கும் உண்மை சம்பவங்களை சொல்லும் இந்த படத்தை ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ தீரன் அருண்குமார் இயக்கியுள்ளார்.

காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தற்போது இரண்டாம் கட்டத்தை நிறைவு செய்துள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் வெளியானபின் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

Latest articles

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

வெள்ளித்திரை – சின்னத்திரை – தமிழ்த் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்! -தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா...

More like this