HomeCinemaதுல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

Published on

துல்கர் சல்மான் தனது அற்புதமான திரைக்கதை தேர்வுக்கு பெயர் பெற்றவர். புத்துணர்ச்சி தனித்துவம் மற்றும் ஒரு நடிகராக சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பதை எப்போதும் விரும்புபவர். அவரது 41-வது திரைப்படத்தில் DQ 41 அறிமுக இயக்குநர் ரவி நெலக்குடிடியுடன் இணைகிறார்.

சமகால காதல் கதையாக வளமான நாடகத்தன்மையுடன் தயாராகும் இந்த திரைப்படத்தை எஸ் எல் வி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெற்றிகரமான தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். இந்தத் திரைப்படம் இந்த நிறுவனத்தின் சார்பில் தயாராகும் பத்தாவது திரைப்படம் SLV 10 என்பது- இந்நிறுவனத்தின் புதிய மைல் கல்லை குறிக்கிறது.

இந்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரமாண்டமான தொடக்க நிகழ்வில் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். சுப முகூர்த்த படப்பிடிப்பிற்கு ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி கலந்துகொண்டு கிளாப் போர்டு அடித்தார். இயக்குநர் புச்சிபாபு சனா கேமராவை இயக்கினார்.‌ குன்னம் சந்தீப், நானி மற்றும் ரம்யா குன்னம் ஆகியோர் இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை படக் குழுவினரிடம் ஒப்படைத்தனர். இப்படத்தின் முதல் காட்சியை ரவி நெலகுடிடி இயக்கினார்.

‘தசரா’ மற்றும் ‘தி பாரடைஸ்’ படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெலாவும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .இதனைத் தொடர்ந்து இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.

மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் வலுவான வெற்றியை வழங்கி வரும் துல்கர் சல்மானை சமாதானப் படுத்துவது எளிதான சாதனை அல்ல .இருப்பினும் இயக்குநர் ரவி நெலகுடிடி துல்கர் சல்மானின் ஆர்வத்தை தூண்டும் வகையில் ஒரு தனித்துவமான மற்றும் புதிய கதையை கொண்டு வந்துள்ளார்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.

இந்தப் படத்தின் தயாரிப்பு தரம் மற்றும் தொழில்நுட்பம் சர்வதேச தரம் என உறுதி அளிக்கிறது. அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களும் இடம் பிடித்திருக்கிறார்கள் அனய் ஓம். கோஸ்வாமி ஒளிப்பதிவை கையாள தேசிய விருதை வென்ற ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் .அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.‌

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this