பிரபல இசை நிறுவனமான சரிகம படத் தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கால் பதித்திருக்கிறது. தற்போது ‘லவ் ரிட்டர்ன்ஸ்’ என்ற தொடரை தயாரித்துள்ளது. 
உங்கள் முன்னாள் காதலியும் உங்கள் மனைவியும் அலுவலக நண்பர்களாக இருந்தால், அந்த முன்னாள் காதலி உங்கள் வீட்டிற்கு வந்து தங்கினால் என்ன நடக்கும் என்ற கதைக்களத்தை மையமாக கொண்டு இந்த தொடர் உருவாகியிருக்கிறது.
முன்னாள் காதலியாக பிரபல சின்னத்திரை தொடரான கயல் புகழ் நடிகை சைத்ரா ரெட்டியும், அன்பு மனைவியாக கனா காணும் காலங்கள் 2 புகழ்
பர்வீனும், இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் கணவனாக பிரபல ஆஃபீஸ் தொடரின் கதாநாயகன் குரு லஷ்மண் நடிக்கின்றனர்.
கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த இந்த குறுந்தொடர் 12 எபிசோடுகளாக சரிகம டைஸ் டிவி ஷோஸ் தமிழ் யூடியூப் சேனலில் வரும் ஆகஸ்ட் 7-ம் முதல் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது.
தயாரிப்பு – சரிகம பிரின்ஸ் இமானுவேல்
கதை – சரிகம கதை இலாகா
நிதி நிர்வாகம் – ராம்குமார்.எம்
மார்க்கெட்டிங் – எம் பிரேம் ஆனந்த்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு – குமார் சி
இயக்கம் – சதாசிவம் செந்தில்ராஜன் & அர்ஜுன் டி வி

