HomeCinemaவிஜய் கௌரிஷ் ஹீரோவாக அறிமுகமாகும் 'கடுக்கா' படத்தின் டீசர் வெளியானது!

விஜய் கௌரிஷ் ஹீரோவாக அறிமுகமாகும் ‘கடுக்கா’ படத்தின் டீசர் வெளியானது!

Published on

விஜய் கௌரிஷ் ஹீரோவாக அறிமுகமாகும் ‘கடுக்கா’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

படத்தை எஸ்.எஸ்.முருகராசு இயக்க ஸ்மேகா, ஆதர்ஷ், கொங்கு மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நிலவை பார்த்திபனின் பாடல் வரிகளுக்கு கெவின் டிகோஸ்டா இசையமைத்துள்ளார். சதீஷ்குமார் துரைக்கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மே மாதம் தேனிசை தென்றல் தேவா அவர்களின் குரலில் “பொல்லாத பார்வை” என்ற லிரிக்கல் வீடியோ பாடல் வெளியாகி, வித்தியாசமான முறையில் பத்திரிக்கை சந்திப்பில் பாடலின் ரீல்ஸ் வெளியிட்டு பிரபலம் அடைந்த நிலையில், இப்போது டீசர் வெளியிட்டு மக்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

ஏற்கனவே “கடுக்கா” திரைப்படத்தின் போஸ்டரை இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர், தயாரிப்பாளர் எல்.கே.சுதீஷ், இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன், தயாரிப்பாளர்
டி.சிவா, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் போன்ற பல பிரபலங்கள் வெளியிட்ட நிலையில் , இன்ஸ்ட்டா பிரபலங்களான நடிகை ஸ்ருதி நாராயணன் கடுக்கா பாடலின் ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமானது. மேலும் “கடுக்கா” திரைப்பட குழு திருப்பத்தூர் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வின் போது பேருந்து நிற்காமல் சென்ற அரசு பள்ளி மாணவி சுகாசினி அவர்களுக்கு ஸ்கூட்டி ஒன்றை பரிசாக வழங்கி ஊக்குவித்து கௌரவித்தது.

கிராமத்து காதல் கதையாக உருவாகியுள்ள “கடுக்கா” திரைப்படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களில் ட்ரெய்லர் வெளியாக உள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று படம் வெளியாக உள்ளது என திரைப்பட குழு அறிவித்துள்ளது. இது தமிழ் சினிமாவில் இதுவரை வராத வித்தியாசமான காதல் கதையாக இருக்கும் என்றும் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்து அனைவரையும் சென்றடையும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this