HomeCinemaஏஐ மூலம் உருவான வீடியோ பாடல், ஆச்சரியப்படுத்தும் இயக்குநர் என்.டி. நந்தா

ஏஐ மூலம் உருவான வீடியோ பாடல், ஆச்சரியப்படுத்தும் இயக்குநர் என்.டி. நந்தா

Published on

வல்ல தேசம் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் என்.டி. நந்தா, புதுமையான முறையில் ஏஐ மூலம் ஒரு முழு இசை வீடியோ ஆல்பம் பாடலை, உருவாக்கி அசத்தியிருக்கிறார்.

இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் என பன்முக திறமை கொண்ட இவர் இப்போது, இசையமைப்பாளராகவும் களமிறங்கி அசத்தியிருக்கிறார்.

சிறு வயது முதலே சினிமா துறை மீது காதல் கொண்டு அதில் சாதிக்க வேண்டும் என இயங்கி வரும் நந்தா தனது படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரி மற்றும் பல முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் திரைப்படத் தயாரிப்பு, சவுண்ட் என்ஜினியரிங், மற்றும் மியூசிக் டெக்னாலஜி ஏஐ ஆகிய துறைகளில் கல்வி பயின்றுள்ளார்.

தமிழ் திரைப்படத்துறையில் இயக்குநராகத் திரையுலகுக்கு அறிமுகமான இவர், 2017-ல் வெளிவந்த “வல்ல தேசம்” எனும் அதிரடித் திரில்லர் திரைப்படத்தின் மூலம் பரவலான பாராட்டுகளைப் பெற்றார். இந்த படத்தில் அவர் இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் ஒளிப்பதிவாளர் (DoP) எனப் பல பொறுப்புகளை ஏற்று தனது பன்முகத் திறமையையும் நிரூபித்துள்ளார்.

தற்போது முழுக்க முழுக்க எந்த ஒரு பங்கேற்பாளரும் இல்லாமல், தானே இசையமைத்து, பாடல் எழுதி ஏஐ மூலம் விஷுவல்களை உருவாக்கி, இந்த புதிய வீடியோ ஆல்பம் பாடலை உருவாக்கி அசத்தியிருக்கிறார்.

“என் உயிரின் ஓசை நீயே” எனும் இப்பாடல் ஒரு பெண்ணின் பார்வையில் காதலின் ஏக்கத்தை, வலியை இன்பத்தை வெகு அழகாகச் சொல்கிறது. இப்பாடல் You Live Only Once எனும் பெயரில் சிற்சில மாற்றங்களுடன் ஆங்கில வடிவிலும் உருவாகியுள்ளது. தமிழ்ப்பாடலை, சீர்காழி சிற்பி எழுதியுள்ளார்.

இன்று வெளியாகியிருக்கும் இப்பாடல் இசை ரசிகர்களிடமும், திரை ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தற்போது, நந்தா ‘120 ஹவர்ஸ்’ எனும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் 2025 டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது.

Latest articles

கார்த்திகை தீபத் திருநாளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்த ‘அறுவடை’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ்!

‘லாரா’ திரைப்படத்தைத் தயாரித்து, நடித்தவர் மு. கார்த்திகேசன். தொடர்ந்து தனது எம். கே. பிலிம் மீடியா ஒர்க்ஸ் பி.லிட் ...

ஸ்ருதிஹாசன் நடிக்கும் திரைப்படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கீஸ்!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களையும், தரமான படைப்புகளையும் தொடர்ந்து வழங்கி வரும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தனது அடுத்த...

மார்வெல் ஸ்டுடியோஸின் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் இறுதி டிரெய்லர் வெளியீடு!

டாக்டர் டூமுக்கு எதிராக ஒன்றிணையும் அவெஞ்சர்ஸ், எக்ஸ்-மென், ஃபென்டாஸ்டிக் ஃபோர் மற்றும் தண்டர்போல்ட்ஸ் என ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற...

பிரேம் குமார் – ஃபஹத் ஃபாசில் கூட்டணியின் ‘அசரீரி’ புத்தாண்டு வெளியீடாக திரைக்கு வருகிறது!  

‘96’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த இயக்குநர் பிரேம் குமார், தொடர்ந்து...

More like this