HomeCinema'துரந்தர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியானது... படம் டிசம்பர் 5-ம் தேதி ரிலீஸாகிறது.

‘துரந்தர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியானது… படம் டிசம்பர் 5-ம் தேதி ரிலீஸாகிறது.

Published on

இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் அதிரடி திரில்லர் படைப்பான ‘துரந்தர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  வீடியோ ரன்வீர் சிங்கின் பிறந்த நாளான இன்று  வெளியாகியுள்ளது.

இரண்டு நிமிடம் 40 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில் மர்மம் – துணிச்சல் – அதிரடி ஆக்சன் காட்சிகள் – ஆகியவை கலவையாக இடம்பெற்று கண்களுக்கு விருந்தளிக்கின்றன. இதற்கு ஷாஷ்வத் ஆற்றல்மிக்க இசையை வழங்கி இருக்கிறார். ஜாஸ்மின் சான்ட்லஸின் குரலும், புதிய யுக கலைஞரான அனுமான் கைன்ட்டின் சிறப்பு ஒத்துழைப்பும்.. பாடலுக்கு எதிர்பாராத வகையில் ஒரு தனித்துவத்தை அளித்திருக்கிறது. அவர்களது பிரத்யேகமான பாணியிலான இந்தப் பாடல், ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது.

படம் தெரியாத மனிதர்களைப் பற்றிய சொல்லப்படாத கதையை விவரிக்கிறது.

ஆதித்யா தர் ( உரி : தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்) இயக்கியுள்ள இந்த படத்தில் ரன்வீர் சிங், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா, ஆர். மாதவன், அர்ஜுன் ராம்பால் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த திரைப்படத்தை B 62 ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதி தேஷ் பாண்டே மற்றும் லோகேஷ் தர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

Latest articles

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

வெள்ளித்திரை – சின்னத்திரை – தமிழ்த் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்! -தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா...

More like this