HomeCinemaஔரங்கசீப் கதாபாத்திரத்தில் ஆழமும், ஆளுமை கொண்ட அம்சங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன! -ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி...

ஔரங்கசீப் கதாபாத்திரத்தில் ஆழமும், ஆளுமை கொண்ட அம்சங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன! -ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி தியோலின் கதாபாத்திர வடிவமைப்பு பற்றி பேசுகிறார் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா 

Published on

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔரங்கசீப்பாக பாபி தியோல் நடிக்கிறார். படத்தை ஜோதி கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

படப்பிடிப்பின் ஆரம்ப கட்டங்களில் பாபி தியோல் அவர்களின் சில காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன. ஆனால் பின்பு, பாபி தியோல் நடித்த ‘அனிமல்’ திரைப்படத்திலுள்ள அவரின் பிரமிக்கவைக்கும் நடிப்பை பார்த்த பிறகு, ஜோதி கிருஷ்ணா அவர்கள் அவரது கதாபாத்திரத்தை முழுமையாக மறுபதிவை செய்து, புதியதொரு வடிவமைப்பில் உருவாக்க முடிவு செய்தார்.

“பாபி தியோல் அவர்களின் ‘அனிமல்’ படத்தில் அளித்த அந்த மௌன நடிப்பு நம் அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது. சொற்கள் இல்லாமல், முகபாவனைகளின் வழியாகவே ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் அவரது திறமை எனக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால்தான், ஹரி ஹர வீரமல்லு படத்திலும் அவரது கதாபாத்திரத்தின் வழித்தோணியை முழுமையாக மாற்ற வேண்டும் என முடிவு செய்தேன்” என்கிறார் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா.

இந்த புதிய வடிவமைப்பின் மூலம் ஔவரங்கசீப்பின் கதாபாத்திரத்தில் ஆழமும், ஆளுமை கொண்ட அம்சங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. கதையின் பின்னணி, உந்துதல், உடல் மொழி என அனைத்தும் பாபி டேயோலின் நடிப்பு சக்திக்கு ஏற்ப மறு வடிவம் பெறப்பட்டுள்ளது.

“புதிய கதாபாத்திர வடிவத்தை நான் அவரிடம் சொன்னபோது, பாபி தியோல் அவர்கள் மிகுந்த உற்சாகத்தைத் தெரிவித்தார். அவருக்கு, சவாலான வேடங்களில் நடிப்பதும், புதியதொரு வடிவில் ரசிகர்களிடம் தன்னை காண்பிப்பதும் மிகவும் பிடிக்கும். ஹரி ஹர வீரமல்லு படத்தில் அவர் மிகுந்த தீவிரம் கொண்ட தோற்றத்தில் தோன்றுகிறார். அவரது பார்வையின் மூலம் தான் சொல்லும் உணர்வுகள், அவரது திரை தோற்றம், ஆளுமை அனைத்தும் கதையை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்கின்றன. அவருடன் பணியாற்றிய அனுபவம் மிக சிறப்பானது” என்கிறார் இயக்குநர்.

இவ்வாறு புதிதாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரம், பாபி தியோலின் தற்போதைய பான் இந்தியா புகழுக்கும், அவரிடம் இருக்கும் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கும் நிச்சயமாக நீதியளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this