HomeCinemaசமீபத்தில் காலமான இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்திற்கு தயாரிப்பாளர் கண்ணன் ரவி வழங்கிய ரூ.5 லட்சம்...

சமீபத்தில் காலமான இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்திற்கு தயாரிப்பாளர் கண்ணன் ரவி வழங்கிய ரூ.5 லட்சம் நிதியுதவி!

Published on

தனித்துவமான கதைசொல்லலுக்கு பெயர் பெற்ற இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் எதிர்பாராத மறைவு தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விக்ரம் சுகுமாறனின் இந்த திடீர் மறைவு திரையுலகினருக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்தினருக்குமே ஈடுசெய்ய முடியாத இழப்பு. இந்த நேரத்தில் மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக அவரது கடைசிப் படமான ’இராவண கோட்ட’த்தைத் தயாரித்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி ரூ. 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

நடிகர் சாந்தனு பாக்யராஜ், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, FEFSI தலைவர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ரோர் முன்னிலையில் விக்ரம் சுகுமாரனின் தாயாரிடம், தயாரிப்பாளர் கண்ணன் ரவி மகன் தீபக் ரவி காசோலையை வழங்கினார்.

இந்த இழப்பு குறித்து கண்ணன் ரவி கூறுகையில், “இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் திடீர் இழப்பு எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் திறமையும் ஆர்வமும் ஒருங்கே கொண்ட இயக்குநர். அவரது திறமையை முழுமையாகக் காணும் முன்பே திரைப்படத்துறை அவரை இழந்தது துரதிர்ஷ்டவசமானது. அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த பிரார்த்தனைகள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். ‘இராவண கோட்டம்’ படக்குழுவினருக்கு விக்ரம் சுகுமாறன் குடும்பமும் எங்களுடைய குடும்பம் போலதான்” என்றார்.

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this