HomeCinemaஊரார் பிரச்சனைகளைத் தீர்ப்பவரை சுற்றும் பிரச்சனைகள்... வேதாத்ரி மகரிஷியின் மனவளக் கலையால் சூழும் மகிழ்ச்சி... கே...

ஊரார் பிரச்சனைகளைத் தீர்ப்பவரை சுற்றும் பிரச்சனைகள்… வேதாத்ரி மகரிஷியின் மனவளக் கலையால் சூழும் மகிழ்ச்சி… கே பாக்யராஜ் நடிக்கும் ‘ஆனந்த வாழ்க்கை’ படத்தில் அணிவகுக்கும் சுவாரஸ்யங்கள்!

Published on

இயக்குநர் கே பாக்யராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, ‘ஆனந்த வாழ்க்கை’ என்ற படத்தை ஆர்.சுப்ரமணிய பாரதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

ஊரில் உள்ளவர்களின் சிக்கலான பிரச்சனைகளை எல்லாம் எளிதாக தீர்த்து வைக்கக்கூடிய ஆற்றல் உள்ள ராமலிங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கே. பாக்யராஜ் தன் குடும்பத்தில் உள்ளவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியாமல் தவிக்கிறார்.

அப்போது தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷியின் ஆழியார் அறிவு திருக்கோயில் பற்றி கேள்விப்பட்டு தன் குடும்பத்தினரை அங்கு அழைத்துச் செல்கிறார். அங்கு மகரிஷி அவர்கள் உருவாக்கிய மனவளக்கலை என்ற எளிய முறை யோகப் பயிற்சிகளை கற்று, அதன் மூலம் எது உண்மையான ஆனந்த வாழ்க்கை என்ற சூட்சமத்தை உணர்ந்து அனைவரும் மகிழ்ச்சியான, மன அமைதியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். இதுவே இந்த படத்தின் கதை.

படத்தில் மீரா கிருஷ்ணன், ஜீவா தங்கவேல், விட்டல் ராவ், குரு அரங்கதுரை, நிஷாந்த், ஜெயந்தி தியாகராஜன், சோபியா வேம்பு, வெடிகண்ணன், பிரியா, மாஸ்டர் ராமானுஜம் ஆகியோருடன் ஆழியாறு அறிவுத் திருக்கோயில் அன்பர்களும் நடித்திருக்கிறார்கள்.

படத்தை அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் ஆசியோடு, பத்மஸ்ரீ எஸ் கே எம் மயிலானந்தம் வழிகாட்டுதல்படி ஆழியாறு அறிவுத் திருக்கோயிலுடன் இணைந்து உலக சமுதாய சேவா சங்கம் தயாரித்திருக்கிறது.

படத்தின் தயாரிப்பு நிர்வாகத்தை ஆழியாறு அருள்நிதி, சி இ ஓ பி முருகானந்தம் கவனிக்கிறார்.

கேங்கர்ஸ் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த சி சத்யா இசையமைத்திருக்கிறார்.

படக்குழு:- ஒளிப்பதிவு கே கோகுல், எடிட்டிங் சிவராஜ், புரொடக்சன் மேனேஜர் எம் உதயகுமார், ஒலிப்பதிவு ஏ கஜபதி,  டிஐ கார்த்தி, இணை இயக்கம் ராமு மா.சே. ஒருங்கிணைப்புக் குழு அரங்கதுரை, மக்கள் தொடர்பு ஜான்சன்.

ஆர்.சுப்ரமணிய பாரதி தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கமும், பெங்களூரு இன்னோவேடிவ் பிலிம் அகாடமியும் (INNOVATIVE FILM ACADEMY) இணைந்து நடத்திய தேசிய அளவிலான குறும்பட போட்டியில் ‘பாஞ்சாலி’ என்ற குறும்படத்திற்காக முதல் பரிசு வென்றவர். இவர் தற்போது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக உள்ளார்.

Latest articles

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

More like this