ஹாரர் சப்ஜெக்டில் திரில்லராய் வேகமெடுக்கும் ‘பரமசிவன் பாத்திமா.’
மதப் பற்றாலும் மத மாற்றத்தாலும் மக்கள் இரு தரப்பாக பிரிந்து கிடக்கும் அந்த கிராமத்தில் தொடர்ச்சியாக, திருமணத்துக்குத் தயாராகி வரவேற்பு நிகழ்ச்சி வரை வந்துவிட்ட இளைஞர்கள் மர்மமாக இறக்கிறார்கள்.
அவர்களை அமானுஷ்ய சக்திகள் கொன்றதாக நம்பப்படும் சூழ்நிலையில், போலீஸ் துப்புதுலக்கி சில உண்மைகளைக் கண்டறிகிறார்கள். அந்த உண்மைகளை ஆரம்பக் காட்சிகளிலிருந்தே ரசிகர்கள் யூகிக்கும்படி திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன்.
கதாநாயகனாக இல்லாமல் கதை நாயகனாக விமல். இந்து மதத்தின் மீது பற்று, இந்துக்களை கிறிஸ்துவர்களாக மாற்றுகிற நபர்கள் மீது நியாயமான கோபம் என என பங்களிப்பு தர வேண்டிய பொறுப்பு. அவருக்கு ஜோடியாக வருகிற சாயாதேவி பல உணர்வுகளை கண்களாலேயே கடத்துகிறார். இருவரும் காதலிக்கும்போது உற்சாகமாகவும் மதவெறியர்களிடம் சிக்கி சின்னாபின்னமான பின் பழிவாங்கும் வெறி கொண்டவர்களாகவும் கதைக்கு தேவையான நடிப்பைத் தந்து கதைக்களத்தை பலப்படுத்துகிறார்கள். பாடல் காட்சியில் கூடுதல் அழகாக தெரிகிறார்கள்.
ஆர்ப்பாட்டமில்லாமல் இந்துக்களை கிறிஸ்துவர்களாக மாற்றுகிற ஃபாதர் வேடத்தில் பொருத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார் எம் எஸ் பாஸ்கர்.
காவல்துறை உயரதிகாரியாக வருகிற இசக்கி கார்வண்ணன் வேகமும் விவேகமும் கலந்து நடக்கும் கொலைக் குற்றங்களின் பின்னணியை அலசி ஆராய்வதில் கெத்து காட்டியிருக்கிறார்.
படத்தின் துவக்கத்தில் ஜேஷ்விதாவின் ஆட்டம் கவர்ச்சி விருந்தாகவும் நிறைவுக் காட்சியில் ஆடுவது ஆன்மிக உணர்வைக் கிளறுவதாகவும் இருக்கிறது. அம்மணி கதையோட்டத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சுகுமாரின் வில்லத்தனம், மனோஜ்குமார், கூல் சுரேஷ், ஆறுபாலா, ஸ்ரீரஞ்சனி, ஆதிரா, காதல் சுகுமார், வீரசமர் என பலரின் நடிப்பு படத்துக்கு சுறுசுறுப்பு தந்துள்ளது.
தீபன் சக்கரவர்த்தியின் இசையில் உருவான பாடல்கள் ரசிக்கவும் வைக்கிறது; வேறு சில பாடல்களை நினைவூட்டவும் செய்கிறது. பின்னணி இசையும்
எம் சுகுமாரின் ஒளிப்பதிவு வழக்கம்போல் தரத்தின் உச்சம்.
மதவெறியர்களை அவர்களால் சீரழிக்கப்பட்டவர்கள் வேட்டையாடுகிற ஹாரர் சப்ஜெக்ட்டில் விறுவிறுப்பாக உருவாகியிருக்கிற இந்த படத்தின் மூலம், மக்கள் மனதிலிருந்து மதப் பாகுபாடு ஒழிய வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன்.
Rating 3 / 5

