HomeMovie Reviewதி வெர்டிக்ட் சினிமா விமர்சனம்

தி வெர்டிக்ட் சினிமா விமர்சனம்

Published on

‘மரணத்துக்குள் புதைந்துள்ள மர்மங்கள்’ என்ற திரில்லர் பாணியில் அமைந்த நீதிமன்ற விசாரணை படம்.

கதை நிகழ்விடம் அமெரிக்கா. ஒரு பணக்காரப் பெண்மணி மரணமடைய, அது கொலையாக இருக்கலாம் என்று கருதுகிற நீதிமன்றம் சிலரை சந்தேக வட்டத்துக்குள் கொண்டுவருகிறது. இறந்தவருடன் நெருக்கமாக இருந்த ஒரு பெண் மீது சந்தேகம் அதிகமாகிறது.

வழக்கறிஞர்களின் விவாதங்கள், குறக்கு விசாரணைகள் என பலவற்றைக் கடந்து கொலையாளி யார், காரணம் என்ன என்பதை சொல்லி நிறைவடைகிறது கிருஷ்ணா சங்கர் இயக்கியிருக்கும் ‘தி வெர்டிக்ட்.’

பணக்காரப் பெண்மணியாக சுஹாசினி மணிரத்னம். வீல் சேரில் அமர்ந்தபடியே பணக்காரத்தனத்தையும் உடனிருப்போர் மீது பாசத்தையும் அனுபவ நடிப்பால் காட்டியிருக்கிறார். ‘என்னை என் பணத்துக்காக யாராச்சும் கொல்லணும்னா கொல்லட்டும்; நான் ஒருமுறைதான் சாவேன்; ஆனா என்னை கொல்றவங்களை ஒவ்வொருநாளும் குற்றவுணர்ச்சி கொல்லும்’ என்பதுபோல் தான மகளாக நினைக்கிற தனது ஃபைனான்ஸியல் அட்வைஸரிடம் மனம்திறந்து பேசும்போது கம்பீரமாக தெரிகிறார்.

மகளாக நினைத்தவரையே கொன்றவர்’ என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி, நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளும்போது கலங்கி நிற்பதாகட்டும், மகளாக கருதும் அளவுக்கு சம்பந்தப்பட்டவரிடம் நற்பெயரைச் சம்பாதிப்பதாகட்டும், காதலனுடன் உற்சாகமாக நேரத்தைச் செலவிடுவதாகட்டும் இந்த கேரக்டரில் இதைவிட பொருத்தமாக நடிக்க முடியாது என்கிற அளவுக்கு பங்களித்திருக்கிறார் ஸ்ருதி ஹரிஹரன். இவரை ஹீரோயின் சென்ட்ரிக் சப்ஜெக்டை கையில் வைத்திருக்கும் டைரக்டர்ஸ் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஸ்ருதி குற்றமற்றவர் என நிரூபிப்பதற்காக வாதாடும் வழக்கறிஞராக கெத்து காட்டியிருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.

ஸ்ருதியின் காதலனாக பிரகாஷ் மோகன்தாஸ். அவருக்கு காதல், காமம், உல்லாசம் என மனம் விரும்பியதை செய்கிற வேலை. அதை வில்லத்தனத்துடன் செய்து கவனம் பெறுகிறார்.

வித்யூலேகாவுக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் முக்கியமான பாத்திரம். மற்ற கேரக்டர்களில் ஹாலிவுட் நடிகர் நடிகைகள் தேவைக்கு துளியும் அதிகமில்லாமல் நடித்திருக்கிறார்கள்.

அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, ஆதித்யா ராவின் பின்னணி இசை, படத்தின் நீளத்தை 118 நிமிடங்களுக்குள் அடக்கிய சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பு என பலவும் படத்தின் பலம்.

ஒரு மரணமும் அது சார்ந்த விசாரணைகளும் என கடந்தோடும் படத்தின் முன்பாதி சற்றே அயர்ச்சி தந்தாலும்,

இடைவேளைக்கு பிறகு பயமும் பதற்றமுமான கொரோனா காலகட்டத்தில் கதை பயணிக்கும்போது விறுவிறுப்பு பல மடங்காகிறது; ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களையும் பார்க்க முடிகிறது.

வழக்கமான மசாலா படம் போலில்லாமல், ஹாலிவுட் படத்தில் நம்மூர் நடிகைகள் நடித்தால் எப்படியிருக்கும் என்ற வித்தியாசமான அனுபவத்தை தருகிற இந்த படத்தின் மூலம்,

அமெரிக்காவில் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் எப்படியிருக்கும் என்பதை தெரிந்துகொள்வது புது அனுபவம்!

தி வெர்டிக்ட் – வெரிவெரி இன்ட்ரஸ்டிங்!

Rating 3.5 / 5 

Latest articles

பகுத்தறிவையும் பேண்டஸியையும் கலந்த க்ரைம் டிராமா ‘பீப்’ செப்டம்பரில் ரிலீஸ்!

‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இல.சண்முகசுந்தர் கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘பீப்.’ எம் குவெஸ்ட்...

இரு மாநில எல்லையில் நடக்கும் விறுவிறுப்பான காதல் கதையில் உருவான ஆலி’ தமிழ், மலையாள மொழிகளில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது!

முற்றிலும் புதிய முகங்களின் பங்களிப்போடு உருவான 'ஆலி'  திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வரும் ஆகஸ்ட் 14-ம்...

மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ படத்தின் டீசர் வெளியானது!

https://www.youtube.com/watch?v=EFI-xLTY9yU   டி ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி...

நியூஸ் 7 தமிழ் விருது வழங்கும் விழா – ஜி கே எம் தமிழ்குமரன் விருதுகள் வழங்கி வாழ்த்துரை!

‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சி நடத்திய Business excellence award 2026  விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ஹயாத்...

More like this