HomeCinemaபா.இரஞ்சித்தின் துணை இயக்குநர் ஜெ பி தென்பாதியான் இயக்கத்தில் கே.ஜெ.ஆர் நடிக்கும் 'அங்கீகாரம்' படத்தின் ஃபர்ஸ்ட்...

பா.இரஞ்சித்தின் துணை இயக்குநர் ஜெ பி தென்பாதியான் இயக்கத்தில் கே.ஜெ.ஆர் நடிக்கும் ‘அங்கீகாரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Published on

கதை நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் நடிக்க, இயக்குநர் பா.இரஞ்சித்திடம் துணை இயக்குநராக பணிபுரிந்த ஜெ பி தென்பாதியான் இயக்கத்தில் உருவாகும் ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் இத்திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் முன்னிறுத்துகிறது. இந்த திரைப்படத்தில் அறம், க/பெ ரணசிங்கம், டாக்டர், அயலான் போன்ற கதையம்சம் உள்ள திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே ஜெ ஆர் கதையின் நாயகனாக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.

சிந்தூரி விஸ்வநாத் , விஜி வெங்கடேஷ், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அங்கீகாரம் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரைப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது.

ஜிப்ரான் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு A.விஸ்வநாத், சண்டை காட்சி பீட்டர் ஹெயின், படத்தொகுப்பு ஷான் லோகேஷ், கலை இயக்கம் ராமு தங்கராஜ், ஒலி வடிவமைப்பு சம்பத் ஆழ்வார், நடனம் ஷெரீப், போன்ற முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்போடு உருவாகிவரும் அங்கீகாரம் திரைப்படத்தை ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாந்த் – அஜித்பாஸ்கர் – அருண்முருகன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

Latest articles

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

வெள்ளித்திரை – சின்னத்திரை – தமிழ்த் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்! -தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா...

More like this