HomeCinemaமுதல் சீசனில் உருவான கேள்விகளுக்கு பதில்களை தரப்போகும் ’ஹார்ட்பீட் சீசன் 2’ இப்போது ஜியோஹாட்ஸ்டாரில்!

முதல் சீசனில் உருவான கேள்விகளுக்கு பதில்களை தரப்போகும் ’ஹார்ட்பீட் சீசன் 2’ இப்போது ஜியோஹாட்ஸ்டாரில்!

Published on

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ’ஹார்ட்பீட் சீசன் 2’, இப்போது ஜியோஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது. ரசிகர்களின் விருப்பமான இந்தத் தொடரின் முதல் நான்கு எபிசோடுகள் இப்போது ஸ்ட்ரீமிங் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் புது எபிசோட் ஒளிபரப்பாகும். இதன் முதல் சீசன் பரபரப்பான திருப்பங்களுடன் முடிவடைந்த நிலையில், விடை தெரியாத கேள்விகளுக்கான விடையை தெரிந்து கொள்ள இரண்டாவது சீசனை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர். இரண்டாவது சீசன் பல முக்கிய தருணங்கள், முரண்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான கதையைத் தரும்.

சீசன் 2 இல், பழைய பதட்டங்களைத் தாண்டி தற்போது சீனியராக பதவி உயர்வு பெற்ற ரீனா (தீபா பாலு) மற்றும் குணா (சர்வா) ஆகியோர் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆர்.கே. மருத்துவமனையின் தூணான டாக்டர் ரதி (அனுமோல்) தனது தனிப்பட்ட வாழ்க்கையைக் காப்பாற்றவும், தனது குழந்தைகளுடன் மீண்டும் இணைவதற்கும் தனது கடமைகளில் இருந்து ஒரு படி பின்வாங்குகிறார். இதற்கிடையில், ரீனா மற்றும் அர்ஜுன் (சாருகேஷ்) இடையேயான மோதல் அதிகமாகி தீர்வு காண முடியாத உணர்ச்சிகளும் அதிகம் பார்க்க முடிகிறது.

தற்போது ஒரு சிறிய மருத்துவமனையில் பணிபுரியும் தேஜு (யோகலட்சுமி) எதிர்பாராத விதமாக ரதியை சந்திக்கிறார். இந்த சீசனில் எதிராராத தருணங்களில் ஒன்று. இவர்களது சந்திப்பு அசௌகரியம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. இதற்கிடையில், அனிதாவுக்கு (பதின்குமார்) ஒரு புதிய காதல் ஏற்படுகிறது. மேலும் புதிய பயிற்சியாளர்களான கமலா கண்ணன் (அப்துல்), கிரண் (சிவம்) மற்றும் நிலோஃபர் (அக்ஷதா) ஆகியோரின் அறிமுகம் ஆர்கே மருத்துவமனை உலகிற்கு புது எனர்ஜி கொடுக்கிறது. பிரீதம் (டிஎம் கார்த்திக்) புதிய தலைமை மருத்துவராக நுழைகிறார். அவரது கதாபாத்திரம் கதைக்கு நிச்சயம் சவாலானதாக இருக்கும்.

அதிக சவால்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் வெளிப்பட காத்திருக்கும் ரகசியங்களுடன், ‘ஹார்ட்பீட் சீசன் 1’ முடிவடைந்திருக்கிறது. சீசன்1-ன் அனைத்து கேள்விகளுக்கும் சீசன் 2-ல் பதில் காத்திருக்கிறது.

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this