HomeCinemaசத்யராஜ், காளி வெங்கட் நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

சத்யராஜ், காளி வெங்கட் நடிக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Published on

சத்யராஜ், காளி வெங்கட் நடிக்க, கார்த்திகேயன் மணி இயக்கியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தின் டைட்டிலுக்கான காணொளி நடிகர் சத்யராஜின் குரலிலும், தோற்றத்திலும் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர்களின் கதாபாத்திரமும், அவர்களது திரைத்தோற்றமும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

படத்தில் ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம், பானுப்பிரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. சி. பாலசாரங்கன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சதீஷ்குமார் சமுஸ்கி மேற்கொள்ள, கலை இயக்க பொறுப்புகளை ஜாக்கி ஏற்றிருக்கிறார். இந்த திரைப்படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மொமெண்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் எக்ஸிகியூடிவ் புரொடக்ஷன் பணிகளை மேற்கொண்டது. இந்த திரைப்படத்தை முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this