HomeCinemaலண்டன் தொழிலதிபர் எஸ் ஜெ சரண் இயக்கியுள்ள பிளாக் ரோஸ்' திரைப்படத்தின் பிரமாண்டமான பைலட் மூவி...

லண்டன் தொழிலதிபர் எஸ் ஜெ சரண் இயக்கியுள்ள பிளாக் ரோஸ்’ திரைப்படத்தின் பிரமாண்டமான பைலட் மூவி ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

Published on

லண்டன் தொழிலதிபர் எஸ் ஜெ சரண் இயக்கத்தில், இதயத் துடிப்பை எகிற வைக்கும் கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது ‘பிளாக் ரோஸ்’ திரைப்படம்.

நிழல்கள் ரவி, பிரித்விராஜ் பப்லு, சாந்தினி தமிழரசன், நகைச்சுவை ஜாம்பவான் நாகேஷின் பேரன் விஜேஷ், ஆனந்த் நாக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இது வரை யாரும் மேற்கொள்ளாத புதுமையான முயற்சியாக இந்த படத்திற்காக மிக அதிக பொருட்செலவில் பைலட் மூவி ஒன்றை சரண் உருவாக்கியிருக்கிறார். கதையின் கருவையும், மாந்தர்களையும், அவர்கள் குணாதிசியங்களையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப் படுத்தும் வகையில் இது உருவாகியுள்ளது.

மிக பிரமாண்டமாக அதி நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைலட் மூவி திரைப்பட விழாக்களிலும் ஓடிடியிலும் வெளியிடப்படவுள்ளது.

அதைத் தொடர்ந்து, ‘பிளாக் ரோஸ்’ திரையரங்குகளில் விரைவில் வெளியாகும். பைலட் மூவியை ஏற்கனவே பார்த்த திரையிலகினரும் இதர பிரமுகர்களும் இயக்குநர் சரணை பாராட்டியுள்ளனர்.

இந்த நிலையில் படம் குறித்து பேசிய சரண், “முதல் காட்சி முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கும் வகையில் பரப்பரப்பான திரில்லராக ‘பிளாக் ரோஸ்’ இருக்கும். ஒரு மர்ம நாவலின் சில முக்கிய‌ பக்கங்களை மட்டும் படிப்பது போல் உருவாக்கப் பட்டுள்ள பைலட் மூவி படம் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். தமிழ் திரையுலகில் ஒரு புதுமையான முயற்சியாக ‘பிளாக் ரோஸ்’ இருக்கும்” என்றார்.

சிறு வயது முதல் இங்கிலாந்தில் வசித்து வரும் இலங்கைத் தமிழரான SJ சரண், லண்டனில் வெற்றிகரமான தொழிலதிபராக திகழந்து வருகிறார். திரைத்துறை மீது தீராத தாகம் கொண்ட இவர், இயக்குநர் ஏ எல் விஜய் உடன் ‘மிஷன்’ திரைப்படத்திலும், மாதேஷ் இயக்கத்தில் திரிஷா நடித்த ‘மோகினி’ திரைப்படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார்.

திரைக்கதை மன்னன் என்று புகழப்படும் கே பாக்யராஜிடமும் பயிற்சி பெற்றுள்ளார்.

படக்குழு:- ஸ்டெஃபானி ஹட்சன் மற்றும் எஸ் ஜெ சரண் திரைக்கதை எழுதியுள்ளனர். விஷ்ணு சுபாஷ் ஒளிப்பதிவு செய்ய, ‘ஜோ’ திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த சித்து குமார் இசையமைத்துள்ளார். தமிழ் குமரன் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். படத்தை கூர்மையான வசனங்களால் மதன் கார்க்கி மெருகேற்றி இருக்கிறார். சுரேஷ் கல்லேரி கலை இயக்கத்தை கையாண்டுள்ளார்.

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this