HomeCinemaசசிகுமார், லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் சத்யசிவா இயக்கிய 'ப்ரீடம்' ஜூலை 10 ம் தேதி வெளியாகிறது!

சசிகுமார், லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் சத்யசிவா இயக்கிய ‘ப்ரீடம்’ ஜூலை 10 ம் தேதி வெளியாகிறது!

Published on

சசிகுமார், லிஜோமோல் ஜோஸ் நடிப்பில், கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கியுள்ள ‘ப்ரீடம்’ திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

90களில் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு, பரபரப்பான திரைக்கதையுடன், அசத்தலான திரில்லர் டிராமாவாக இந்த படம் உருவாகியுள்ளது.

டூரிஸ்ட் ஃபேமிலி பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, சசிக்குமார் அதே போன்ற மாறுபட்ட ஈழ பின்னணி களத்தில், இப்படத்தில் அசத்தவுள்ளார். சசிக்குமார், சிம்ரன் ஜோடி போலவே, இப்படத்தில் சசிகுமார் மற்றும் ஜெய்பீம் புகழ் லிஜோ மோல் ஜோஷ் ஜோடி ரசிகர்களை ஈர்ர்கும். அவர்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி மிக அழகாக அமைந்துள்ளது.

வித்தியாசமான களங்களில் தொடர் வெற்றிப்படங்களைத் தந்து வரும் சசிகுமாருக்கு மீண்டும் மக்கள் மனம் கவரும் ஒரு இனிமையான வெற்றிப்படமாக இப்படம் இருக்கும்.

90 கால கடத்தில் நடக்கும் கதை என்பதால் அந்த கால கட்டத்தைத் திரையில் கச்சிதமாகக் கொண்டுவர, படக்குழு கடுமையாக உழைத்துள்ளது. 90 களின் காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் மிகப்பெரும் பொருட்செலவில் ஒரு பிரம்மாண்டமான செட் அமைத்து, படத்தின் காட்சிகளைப் படக்குழு படமாக்கியுள்ளது. சென்னை மற்றும் கேரளாவில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

ஜெய்பீம் படத்தில் கவனம் ஈர்த்த லிஜோமோல் ஜோஸ் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். பாலிவுட் படங்களில் மிரட்டும் சுதேவ் நாயர் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் கேஜிஎஃப் மாளவிகா, போஸ்வெங்கட், மு ராமசாமி, ரமேஷ்கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

விரைவில் படத்தின் டீசர், டிரெய்லர் வெளியாகவுள்ளது.

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this