இயக்குநர் கே.பாக்யராஜ் கலெக்டராக முதன்மை பாத்திரத்தில் நடிக்க, கதாநாயகனாக யூடியூப்பர் மகேஷும் கதாநாயகியாக வைஷ்ணவியும் நடிக்கும் படம் ‘ஆண்டவன்.’
வில்லிதிருக்கண்ணன் இயக்கியுள்ள இந்த படம் வரும் மே மாதம் 6’ம் தேதி திரைக்கு வரவுள்ளது. முன்னதாக படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் உற்சாகமாக நடந்தது.
இயக்குநர் கே.பாக்யராஜ், ஜாகுவார் தங்கம், கேந்திரன் முனியசாமி, கஞ்சா கருப்பு, முத்துக்காளை, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.
முந்தானை முடிச்சு படத்தின் மூலம் முருங்கைக்காயை பிரபலப்படுத்திய பாக்யராஜுக்கு முருங்கைக்காயை படக்குழுவினர் பரிசளிக்க நிகழ்ச்சியில் உற்சாகம் பரவியது.
ஆளில்லாத கிராமங்கள் அதிகரித்து வருகிறது, கிராமங்களை காப்பாற்றுங்கள் என்பதே படத்தின் மையக்கரு. எதார்த்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கஞ்சா கருப்பு, முத்துக்காளை, ஹலோ கந்தசாமி, ஆதிரா, டாக்டர் முத்துச்செல்வம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படக்குழு:- ஒளிப்பதிவு மகிபாலன், இசை கபிலேஷ், பின்னணி இசை சார்லஸ் தனா, எடிட்டிங் லட்சுமணன், நடனம் பவர் சிவா, சண்டை பயிற்சி சரவெடி சரவணன், இனைத் தயாரிப்பு டாக்டர் முத்துச்செல்வம், சேலையூர் எஸ்.எஸ்.சுரேஷ். பிஆர்ஓ கோவிந்தராஜ்.

