HomeCinemaஏடிஎம் வேன் கடத்தல் பின்னணியில் பரபரப்பான திரைக்கதையில் ‘ரூல் நம்பர் 4.' நவம்பர் 3-ம் தேதி...

ஏடிஎம் வேன் கடத்தல் பின்னணியில் பரபரப்பான திரைக்கதையில் ‘ரூல் நம்பர் 4.’ நவம்பர் 3-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ்!

Published on

சென்டிமென்ட் ஆக்சன் திரில்லர் சப்ஜெக்டில் YSIMY புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள படம் ‘ரூல் நம்பர் 4.’

பாஸர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஏகே பிரதீப் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, ஸ்ரீகோபிகா கதாநாயகியாக நடிக்கிறார். அவர்களுடன் மோகன் வைத்யா, ஜீவா ரவி, கலா கல்யாணி, பிர்லா போஸ், கலா பிரதீப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

ஏடிஎம் வேன் டிரைவராக பணிபுரிகிற கதாநாயகன் தமிழுக்கு, ஏடிஎம் செக்யூரிட்டியின் மகள் மீது காதல் உருவாகி, நாட்கள் நல்லபடியாய் நகர்கிறது. அந்த நிலையில் ஒருநாள் ஏடிஎம் வேனை கொள்ளையடிக்க ஒருதரப்பினர் திட்டமிடுகிறார்கள். வேன் டிரைவரான கதாநாயகனின் காதலியும் கர்ப்பிணி பெண் ஒருவரும் கடத்தப்படுகிறார்கள். அப்படியான சூழ்நிலையில் கதாநாயகன் எப்படி செயல்படுகிறான், அதற்கான பலன் என்ன என்பதை அதிரடியான திரைக்கதையில் உருவாக்கியிருக்கிறார்கள். காடு, ஊழல்வாதிகள், நேர்மையற்ற காட்டிலாக்கா அதிகாரிகள் என காட்சிகளை பரபரப்புக்கு பஞ்சமில்லாதபடி அமைத்திருக்கிறார்கள்.

படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களுக்கு கெவின் டெகாஸ்டா இசையமைத்துள்ளார்.

விறுவிறுப்பான கதைக்களம், அதிரடி ஆக்சன், அட்டகாசமான சென்டிமென்ட் என உருவாகியுள்ள இந்த ‘ரூல் நம்பர் 4′ வரும் நவம்பர் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தை ‘ஆக்ஷன் ரியாக்ஷன்’ ஜெனிஷ் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

படக்குழு:-
டேவிட் ஜான் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு தீரஜ் சுகுமாறன் பின்னணி இசையமைத்துள்ளார். எஸ்.பி.அஹமது எடிட்டிங் பணிகளைக் கவனிக்க, நடன இயக்குநர் பொறுப்பை அஜய் காளிமுத்து ஏற்றுள்ளார். சண்டைக் காட்சிகளை ராக் பிரபு வடிவமைத்துள்ளார். ஜெகானந்த வர்தன் படத்தின் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். மக்கள் தொடர்பு பணிகளை பா.சிவக்குமார் கவனிக்கிறார்.

தயாரிப்பாளர் – ஷிமி இஸட் (Simy Z )
இணை தயாரிப்பாளர்கள் – ஏ. குமரபிள்ளை, கிரண் மேலவீட்டிள், தேவராஜன் பிள்ளை

Latest articles

குடும்பங்கள் ரசிக்கும்படியான உணர்வுப்பூர்வமான கதையில், இயக்குநர் பாண்டிராஜின் உதவி இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கும் ‘குட் நியூஸ்’ திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!

இயக்குநர் பாண்டிராஜின் உதவி இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கும் குட் நியூஸ்' திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது! இவ்விழாவில் தமிழ்...

யோகி பாபுவின் 300-வது திரைப்படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’ ஜூலை 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

யோகிபாபுவின் 300-வது திரைப்படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ள அர்ஜுனன் பேர் பத்து' திரைப்படம் வரும் ஜூலை 17-ம் தேதி...

ப்ராமிஸ் சினிமா விமர்சனம்

குடிக்க மாட்டேன் என காதலிக்கு செய்து கொடுத்த ப்ராமிஸை மீறுகிறான் நாயகன் மித்ரன். அவன் திருந்த மாட்டான் என்பதை...

‘பூனி பியர்ஸ்: தி ஹிட்டன் புரொடக்டர்’ (Boonie Bears: The Hidden Protector) சினிமா விமர்சனம்

அசுர சக்தி படைத்தவர்கள் உலகத்தை அழிக்க முயற்சிப்பதும், அதை ஹீரோக்கள் எதிர்த்துப் போராடுவதுமாக பழக்கப்பட்ட  உலகளவில் பிரபலமான ஃபேண்டசி...

More like this