HomeCinemaமெல்லிசை, மனதை வருடும் குரல்... மையல் படத்திலிருந்து 'என்னடி செஞ்ச என்னோட நெஞ்ச' அசத்தல் பாடல்...

மெல்லிசை, மனதை வருடும் குரல்… மையல் படத்திலிருந்து ‘என்னடி செஞ்ச என்னோட நெஞ்ச’ அசத்தல் பாடல் வெளியீடு!

Published on

மெல்லிசை, மனதை வருடும் குரல்கள், கவிதையாய் பேசும் வரிகள்… இவை அனைத்தும் இணையும் போது, இசை நாயகர்களின் உள்ளங்களை தீண்டும் ஒரு மந்திரம் உருவாகிறது. கூட மேல கூட வச்சு, கண்கள் இரண்டால் போன்ற இனிமை நிரம்பிய பாடல்களின் வரிசையில் இப்போது இணையப்போகும் இன்னொரு மர்ம மாயம் மையல் படத்தில் இருந்து வெளிவந்துள்ள ‘என்னடி செஞ்ச என்னோட நெஞ்ச.’

இந்த இசை அனுபவத்தை இசையமைப்பாளர் அமர்கீத் தனது நுட்பமான இசை பாணியால் உயிரூட்டுகிறார். பாடலுக்குச் சுவை கூட்டும் விதமாக, சத்யப்ரகாஷ் மற்றும் வந்தனா ஸ்ரீனிவாசன் ஆகியோரின் மென்மையான குரல்கள் பாடலின் உணர்வுகளை நம் உள்ளங்களில் நேரடியாகப் பதிய செய்கின்றன. மிக எளிமையாக அமைக்கப்பட்ட இசை பின்னணி, பாடலின் உணர்வுபூர்வ தன்மையை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

ஏகாதசி எழுதிய வரிகள், எளிமை மற்றும் அழகிய உணர்வுகளின் இணைவு. அவரது வார்த்தைகள், நம்மை அசைவற்றுப் பார்த்து உணர்ச்சிகளை அள்ளி தருகின்றன.

மையல் உணர்ச்சிகளால் நெஞ்சை தொடும் ஓர் யதார்த்தக் கதை. இயக்குனர் ஏ.பி.ஜி. ஏழுமலை,கதை திரைக்கதை வசனம் ஜெயமோகன். சேது மற்றும் சம்ரித்தி தாரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை அனுபமா விக்ரம் சிங், ஆர். வேணுகோபால், மற்றும் ஐகான் சினி கிரியேஷன் எல் எல் பி தயாரிக்கின்றனர்.

‘என்னடி செஞ்ச என்னோட நெஞ்ச’ தற்போது யூட்யூப் மற்றும் அனைத்து முக்கிய இசை தளங்களில் வெளியாகி, ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகிறது.

படத்தின் பாடல், டிரெய்லர் வெளியீடு மற்றும் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் தேதி குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும்.

Latest articles

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் ‘நான் அவனில்லை’ ஜீவன்!

‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ திரைப்படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த...

சர்வதேச ரசிகர்களை மிரள வைத்த மலையாள சினிமா: டொராண்டோ திரைப்பட விழாவில் வரவேற்பை பெற்ற ‘ஹாஃப்’

சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவான 'ஹாஃப்' (HALF) திரைப்படம், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) மதிப்புமிக்க...

’விட்ரா மச்சா…’ எதிர்பாராத திருப்பங்களுடன் துள்ளல் இசையில் உருவான வித்தியாசமான காதல் தோல்வி பாடல்!

தமிழில் இசை சார்ந்த கதையாடலுக்கான புதிய களமாக சுயாதீன இசை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. திரைப்படப் பாடல்களுக்கு கிடைக்கும்...

More like this