HomeCinemaஉண்மைச் சம்பவ பின்னணியில் அழகான காதல் கதையில் யோகிபாபு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்!

உண்மைச் சம்பவ பின்னணியில் அழகான காதல் கதையில் யோகிபாபு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்!

Published on

யோகிபாபு, காதல் நாயகனாகவும், எமோஷனலாகவும் புதுமையான பாத்திரத்தில் நடிக்கவுள்ள படத்தை அறிமுக இயக்குநர் ரா.ராஜ்மோகன் இயக்குகிறார்.

இந்த படம் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில், ஒரு அழகான காதல் கதையுடன் உருவாகிறது. தமிழ் புத்தாண்டையொட்டி, இப்படத்தின் படப்பிடிப்பு அருள் முருகன் கோவிலில் எளிமையான பூஜையுடன் துவங்கியது.

இந்த படத்தில் அனாமிகா மகி நாயகியாக அறிமுகமாகிறார். இயக்குநர் லெனின் பாரதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். காளி வெங்கட், அயலி மதன், பாவா லக்‌ஷ்மன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறன்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் இரும்புக்கடை தொழிலாளியான நடுத்தர வர்க்கத்து இளைஞனின் வாழ்வும், அவனது காதலுமாக, ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவம் தரும் வகையில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் ரசிக்கும் கமர்சியல் படமாக இப்படம் உருவாகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலை பட இயக்குநர் லெனின் பாரதியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ரா.ராஜ்மோகன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ரைட்டர், தண்டகாரண்யம் படங்களின் ஒளிப்பதிவாளர் பிரதீப் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கோட், அமரன் பட கலை இயக்குநர் சேகர் இப்படத்திற்கு கலை இயக்கம் செய்கிறார். சண்டைப்பயிற்சியாளர் ஓம் பிரகாஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். பருத்திவீரன், சுப்பிரமணியபுரம் படங்களின் உடை வடிவமைப்பாளர் நட்ராஜ் உடைவடிவமைப்பு செய்கிறார்.

படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் தெரியவரும்.

Latest articles

‘தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ திரைப்படத்தின் சக்திவாய்ந்த நட்சத்திரக் கூட்டணியில் பெலவாடி மல்லம்மாவாக இணைந்த நடிகை பூமி சதீஷ் பெட்னேக்கர்! 

தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ் திரைப்படத்தின் நட்சத்திர பட்டியல் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இந்திய...

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

More like this