HomeCinemaபள்ளிக்கூடத்தில் துவக்கவிழா... சாணி படக்குழுவின் வித்தியாச முயற்சி!

பள்ளிக்கூடத்தில் துவக்கவிழா… சாணி படக்குழுவின் வித்தியாச முயற்சி!

Published on

அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக அமைந்த நிகழ்வு ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், கருங்குழி கிராமத்தில் நடைபெற்றது.

மருது புரொடக்ஷன் தயாரிப்பில், சி. மோகன்ராஜ் எழுதி இயக்கும் மற்றும் மருது பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் சாணி’ என்ற திரைப்படத்தின் பூஜை, அந்த கிராமத்தில் அமைந்துள்ள சி எஸ் ஐ பெண்கள் தொடக்கப் பள்ளியில் கல்வித் தலைவர்களாகிய டாக்டர்.அம்பேத்கர், தந்தை பெரியார், டாக்டர்.முத்துலட்சுமி, பெருந்தலைவர் காமராஜர், அப்துல்கலாம் ஆகியோரின் புகைப்படங்களை வைத்து படத்துவக்கவிழா நடத்தப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள்கலந்துகொண்டனர்.

அனைத்து மாணவிகளுக்கும் இனிப்புகள், நோட்டு புத்தகம், பேனா மற்றும் புத்தகப் பைகள் வழங்கப்பட்டு, சமூகக் கட்டுப்பாட்டுடன் கல்விக்கும் கலைக்கும் இடையே பாலம் அமைக்கும் முயற்சியாக இந்த நிகழ்வு அமைந்தது.

அப்போது பேசிய இயக்குநர் சி. மோகன்ராஜ், தான் இன்றும் இன்னிலைக்கு வர முதல் காரணம் கல்வி மட்டுமே. கல்வி இல்லையெனில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த என்னால் எழுதவோ, படிக்கவோ, சிந்திக்கவோ சாத்தியமில்லை என்பதனால் தனது முதல் படத்தை பள்ளியில் கல்விக்காக போராடிய தலைவர்களின் முன்னிலையில் மாணவ மாணவிகளின் ஆசீர்வாதத்துடன் திரைப்பட பயணத்தை தொடங்கவேண்டும் என்ற எனது பல நாள் கனவு இன்று நிறைவடைந்தது.

இதற்கு உறுதுனையாக இருந்த தயாரிப்பாளர் மற்றும் இந்த கதையின் கதாநாயகனுமாகிய என் அண்ணன் மருது பாண்டியன் அவர்களுக்கும் மற்றும் இந்த நிகழ்ச்சியை பள்ளியில் நடந்த அனுமதி தந்த பள்ளியின் முதல்வர்,மற்றும் ஆசிரியர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது .

கலையின் ஒரு வடிவம் தான் சினிமா. நல்ல திரைப்படங்கள் மாணவர்களுக்கு பாடமாகக்கூட அமைந்திருக்கின்றன. பள்ளிக்கூடத்தில் ஒரு திரைப்படத்தின் துவக்கவிழாவை துவங்கியிருப்பதிலிருந்து புரிந்துகொள்ளலாம் இந்த திரைப்படம் எதை பேசவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது என்பதை.

தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத வகையில், பள்ளி வளாகத்தில் மாணவிகளின் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் படத்துவக்கவிழா வரலாற்றில் எங்களுக்கு மறக்கமுடியாத ஒரு நிகழ்வாகும் என்றார்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.

Latest articles

கோகினூர் வைரத்தின் வரலாற்றுப் பதிவுகளை வைத்து உருவான கோகினூர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு! படத்தொகுப்பு, பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் விறுவிறுப்பு.

எஸ்.பி.ஜி சினிமாஸ் சார்பில் ராஜம் இ.கஜேந்திரா தயாரித்து இயக்கியுள்ள படம் 'கோகினூர்.' படத்தின் கதை வைரங்களின் ராணியாக திகழும் கோகினூர்...

வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், டிஜிட்டல் திரை நட்சத்திரமும், 'டிராகன்'...

கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=65mrBBZbSbo கார்த்தி கதாநாயகனாக, இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் மற்றும்...

பகுத்தறிவையும் பேண்டஸியையும் கலந்த க்ரைம் டிராமா ‘பீப்’ செப்டம்பரில் ரிலீஸ்!

‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இல.சண்முகசுந்தர் கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘பீப்.’ எம் குவெஸ்ட்...

More like this