HomeCinemaஎன். ஆர். ரகுநந்தனின் இதயம் தொடும் இசையோடு, கும்பகோணம் கல்லூரி பின்னணியில் நடைபெறும் கதையாக 'கிறிஸ்டினா...

என். ஆர். ரகுநந்தனின் இதயம் தொடும் இசையோடு, கும்பகோணம் கல்லூரி பின்னணியில் நடைபெறும் கதையாக ‘கிறிஸ்டினா கதிர்வேலன்.’

Published on

கும்பகோணம் தாராசுரத்தை சேர்ந்த டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி ஶ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி பேனரில் தயாரிக்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.ஜெ.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்குகிறார்.

கும்பகோணம் கல்லூரி பின்னணியில் மதங்கள் கடந்த காதலை மண் மணத்தோடு சொல்லும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தில் ‘காலங்களில் அவள் வசந்தம்’ கெளஷிக் ராம் நாயகனாக நடிக்க, ‘கொண்டல்’ மலையாள படத்தின் மூலம் கேரள ரசிகர்களின் இதயங்களோடு இணைந்த பிரதிபா தமிழில் நாயகியாக அறிமுகம் ஆகிறார்.

சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், டி எஸ் ஆர், ஆருள் டி. ஷங்கர், சிலுமிஷம் சிவா, ரவி விஜே, கனா காணும் காலங்கள் புவனேஸ்வரி, சஞ்சய்வர்மன்,
ஆதித்யா டிவி விக்கி, சத்யா, மைக்கேல் உள்ளிட்டோர் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் எஸ்.ஜெ.என். அலெக்ஸ் பாண்டியன், “கல்லூரியில் உடன் படிக்கும் ஒரு பெண்ணை நாயகன் ஒரு தலையாக காதலிக்க, சக மாணவியான மிகவும் சக்திவாய்ந்த ஒருவரின் தங்கையின் காதலை சேர்த்து வைப்பதற்காக நாயகனும் நாயகியும் இணைய, அது நாயகன்-நாயகியின் வாழ்வையே புரட்டிப்போட என ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ விறுவிறுப்பாக செல்லும்.

‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தில் மாநகர இளைஞனாக நடித்த கெளஷிக் ராம், கும்பகோணம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களின் பின்னணியில் உண்மை சம்பவத்தை அடிப்படை யாக கொண்டு உருவாகி இருக்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படத்திற்காக தன்னை முற்றிலும் மாற்றிக் கொண்டு கிராமத்து கதிர்வேலன் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். நாயகி பிரதிபாவின் அசாத்திய நடிப்பும், உணர்வுகளை அவர் வெளிப்படுத்தும் விதமும் குழுவினரின் பாராட்டுகளை அள்ளியது.

எதார்த்தம் மீறாத இப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தனின் இசை மிகப்பெரிய பக்க பலமாகும். 2023ம் ஆண்டு வெளியான ‘அயோத்தி’ திரைப்படத்தின் பின்னணி இசையை போன்று ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ பின்னணி இசையையும் மக்கள் கொண்டாடுவார்கள். தனது முதல் படத்திலேயே முத்திரை பதிக்கும் தேர்ந்த ஒளிப்பதிவை பிரகத் முனியசாமி வழங்கியுள்ளார்,” என்று தெரிவித்தார்.

ஶ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி பேனரில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில் எஸ்.ஜெ.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தை கோடை விடுமுறை ஸ்பெஷலாக மே மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தனது இசை மழையால் பல வெற்றிப் படங்களுக்கு உயிரூட்டிய என். ஆர். ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைக்க, பிரகத் முனியசாமி ஒளிப்பதிவை கவனிக்கிறார். லோகேஷ்வர் படத்தொகுப்பை கையாளுகிறார். பாடல்கள்: மோகன் ராஜன், கருமாத்தூர் மணிமாறன். தயாரிப்பு மேலாளர்: நமஸ்காரம் சரவணன்; போஸ்ட் புரொடக்ஷன்: Bee ஸ்டுடியோஸ்; கலரிஸ்ட்: பரணிதர்; வி எஃப் எக்ஸ்: ராகவ கோபாலன்; மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

Latest articles

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் சிட்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் ஜி.வி. பிரகாஷ் குமார்!

லட்சுமி அம்மாள் பிலிம்ஸ்' சார்பாக விருத்தாச்சலம் படத்தை தயாரித்த செந்தில்முருகன் தனது இரண்டாவது படமாக தயாரித்துள்ள படம் 'சிட்டா.' படத்தில்...

சூப்பர் ஸ்டாரின் ‘தர்மன்’ படத்தில் இணைந்தார் நயன்தாரா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா இணைந்துள்ளதாக படக்குழு...

மகன் அதீப்புடன் கியூட் போஸில் நடிகை சிம்ரன்… வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்த சிம்ரன், தனது அழகாலும், வசீகரமான புன்னகையாலும், தனித்துவமான ஸ்டைலாலும் இன்றும்...

பிரபுதேவா – சிம்ரன் நடிக்கும் ‘கமல் ஸ்ரீதேவி’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பரபரப்பு!

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும் இப்படத்தை பசிலியான் நாசரேத், மகேஷ்...

More like this