HomeMovie Reviewட்ராமா சினிமா விமர்சனம்

ட்ராமா சினிமா விமர்சனம்

Published on

மெடிக்கல் கிரைம் சார்ந்த படங்களின் வரிசையில் ‘இப்படியெல்லாம்கூட நடக்குமா?’ என அதிரவைக்கும் கதையில் உருவான ‘ட்ராமா.’

விவேக் பிரசன்னா – சாந்தினி தம்பதி கல்யாணமாகி நான்கு வருடங்கள் கடந்தபின்னும் குழந்தை பிறக்காத கவலையில் இருக்கிறார்கள்.

இளம்பெண் பூர்ணிமா தன் காதலனுடன் அத்துமீறிப் பழகி தாய்மையடைந்திருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த பூர்ணிமாவின் பெற்றோர் கருவை கலைக்கச் சொல்கிறார்கள். பூர்ணிமா, ‘கலைக்க மாட்டேன்’ என உறுதியாகச் சொல்கிறார்.

விவேக் பிரசன்னா – சாந்தினி தம்பதி தங்கள் குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக அந்த ஊரிலுள்ள கருத்தரித்தல் சிகிச்சை மையத்தை அணுகுகிறார்கள். அந்த மையத்துக்கும் பூர்ணிமாவின் காதலனுக்கும் ஒருவித தொடர்பு இருக்கிறது. அந்த தொடர்பால் விவேக் பிரசன்னா – சாந்தினி தம்பதி பெரியளவில் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள்.

அவர்கள் அப்படி என்ன அச்சுறுத்தலை சந்திக்கிறார்கள்? பூர்ணிமாவின் காதலனுக்கும் அந்த மையத்துக்கும் என்ன தொடர்பு? கருவை கலைக்கும் விஷயத்தில் பூர்ணிமா என்ன முடிவுக்கு வந்தார்? இப்படியான பல கேள்விகளுக்கு அடுத்தடுத்த காட்சிகளில் பதில் தருகிறார் இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன்.

குழந்தையில்லாத வேதனையை முகபாவங்களில் சரியாகப் பிரதிபலிக்கிற விவேக் பிரசன்னா _ சாந்தினி, கேவலமான வேலையைச் செய்தாலும் காதலை மதிக்கிற பிரதோஷ், காதலன் மாபெரும் குற்றவாளி என தெரிந்து நிலைகுலைந்து போகிற பூர்ணிமா ரவி, தவறான வழியில் கர்ப்பமான மகளிடம் ஆத்திரத்தை கொட்டித் தீர்க்கும் பெற்றோராக மாரிமுத்து _ ரமா, நண்பனாகப் பழகி துரோகியாக மாறுகிற ஆனந்த் நாக், கருத்தரித்தல் சிகிச்சை என்ற பெயரில் லட்ச லட்சமாக பணம் சம்பாதிப்பதற்காக படு கேவலமாக செயல்படுகிற பிரதீப் விஜயன்… அத்தனை பேரின் நடிப்பும் கச்சிதம்.

பின்னணி இசை, ஒளிப்பதிவு உள்ளிட்டவை பட்ஜெட்டுக்கேற்ற தரம்.

குழந்தையின்மை பிரச்சனையால் மன உளைச்சலுக்கு ஆளாகும் தம்பதியர் கருத்தரித்தல் சிகிச்சை மையங்கள் மீது நம்பிக்கை வைத்து ஆயிரக்கணக்கில் பணத்தை செலவு செய்கிறார்கள். பலனும் பெறுகிறார்கள். அப்படிப்பட்டவர்களை இந்த சமூகம் ஒருவித சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்க இந்த படத்தின் சம்பவங்கள் வாய்ப்பு தரலாம். மற்றபடி எந்த தாக்கத்தையும் தர வாய்ப்பில்லை.

ட்ராமா _ அட ராமா!

Rating 2 / 5

Latest articles

முகேன் ராவ் நடிப்பில் மருத்துவப் பின்னணியில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் ‘நிறம்’ நவம்பர் 27-ம் தேதி வெளியாகிறது!

K Square Cinemas தயாரிப்பில், கே. பிந்து மாதவி தயாரித்து, பலராம் கிருஷ்ணா இயக்கியுள்ள திரைப்படம் ‘நிறம்’. முகேன்...

கல்விக்காகத் தனது சொத்தில் பாதியை எழுதி வைத்த வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகத் தனது வாழ்க்கையையும் சொத்துக்களையும் அர்ப்பணித்த வள்ளல் சி. கந்தசாமி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக...

குடும்ப உணர்வுகளோடு சிட்பண்ட் மோசடிகள் குறித்த விழிப்புணர்வு… பரபரப்பான கதையில் உருவான ‘மதுர மோசடி’ விரைவில் வெளியாகிறது!  

சமூகத்தில் நடைபெறும் சிட்பண்ட் மோசடிகள் குறித்த விழிப்புணர்வைத் தூண்டும்படியும், குடும்ப உணர்வுகளையும் இணைத்தும் வி.கே. விஜயகண்ணா இயக்கியுள்ள படம்...

‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் குரலில் இறுதியாக உருவான ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் முதல் பாடலான ‘வா சிவா’ வெளியீடு!

https://www.youtube.com/watch?v=1QkC9LEGzNw இயக்குநரும் நடிகருமான K. P. ஜெகன் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'ஜெயில் மேட்ஸ்' திரைப்படத்தில், மறைந்த...

More like this