HomeCinemaஇரண்டு கதாநாயகிகளுடன் லூட்டி; 20 ஸ்டண்ட் கலைஞர்களுடன் மோதல்... இஷாக் உஷைனி இயக்கி நடிக்கும் பூகம்பம்...

இரண்டு கதாநாயகிகளுடன் லூட்டி; 20 ஸ்டண்ட் கலைஞர்களுடன் மோதல்… இஷாக் உஷைனி இயக்கி நடிக்கும் பூகம்பம் படத்தில் அணிவகுக்கும் சுவாரஸ்யங்கள்!

Published on

தற்காப்புக் கலைஞர் இஷாக் உஷைனி தனது ஐ இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கதை திரைக்கதை வசனம் எழுதி கதைநாயகனாக நடித்து தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பூகம்பம்.’

முழுக்க முழுக்க போலந்து மற்றும் ஜெர்மன் நாட்டில் வளர்ந்துள்ள இந்த படத்தில் தில்சானா, ஹேமா, ரிஷத், எம்.எம். இலியாஸ், மல்கோத்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

உள்ளூர் அரசியல் வாதிகளின் தில்லுமுல்லுகளை தோலுரித்து காட்டும் காட்சிகளும், காதலிக்கும் காதலர்களின் மறுபக்கத்தின் நிதர்சன உண்மைகளையும், பொதுவாழ்வில் அரசியல்வாதி மக்கள் மத்தியில் எப்படி இருந்தால் மக்கள் ஆதரிப்பார்கள் என்பதையும் கல்லூரி மாணவர்கள் நினைத்தால் அரசியலில் உள்ள உச்ச சிம்மாசனத்தை மாற்ற முடியும் என்பதையும் படத்தில் சொல்லியிருக்கிறார்.

அதிக பொருட்செலவில் மிக பிரமாண்டமாக உருவாகும் “பூகம்பம்”படத்தில் போலி அரசியல்வாதி போர்வையில் உலவுபவர்களை தோலுரித்து காட்டியுள்ளார்.

இஷாக்ஹுசைனி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். மதுரையில் பிறந்தவர். உலகப் புகழ்பெற்ற தமிழ்நாட்டின் தற்காப்பு கலைஞரான ஷிகான் உசைனியின் சகோதரர். போலந்து நாட்டில் தொழிலதிபராக இருக்கிறார். சில வெற்றி படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

படத்தில் வரும் கிளைமேக்ஸ் காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர்கள் கமாண்டர் கே.பாபு மற்றும் பொன்னேரி புயல் டாக்டர்.ஜோதி இவர்களுடன் இணைந்து தனக்கு தெரிந்த தற்காப்பு கலையையும் பயன்படுத்தி 20 ஸ்டண்ட் கலைஞர்களுடன் மோதும் சண்டைக் காட்சிகள் அனல் பறக்கும் வண்ணம் படமாக்கியிருக்கிறார்.

படத்தில் பைக்கில் வரும் சண்டைக் காட்சிகளில் இதுவரை தமிழ் திரை உலகில் காணாத ஆக்சன் காட்சிகளில் வித்தியாசமாக முயற்சி செய்து படப்பிடிப்பில் கைதட்டல் பெற்றுள்ளார் படகுழுவினரிடம்.

தில்ஷானா. ஹேமா ஆகிய இருவரிடம் காதல் வலையில் சிக்கி லூட்டி அடிக்கும் இஷாக்ஹுசைனி இருவரில் யாரை காதலிக்கிறார் என்பது கதையின் சுவாரஸ்யம்.

எதிரியை வீழ்த்த நண்பர்களுடன் போராடும் கதை ஒருபுறம். மக்களுக்காக ஒரு நேர்மையான அரசியல்வாதியை சிம்மாசனத்தில் அமர வைக்க முயற்சி செய்வது மறுபுறம்.

இரண்டு காதலிகளில் யாரை காதலிக்கப் போகிறார் என்பது இன்னொருபுறம். அரசியல்வாதியிடம் கேள்வி கேட்கும் வசனத்தை தன்னுடைய பாணியில் எழுதி அசத்தியிருக்கிறார்.

காதல். அதிரடி அரசியல் , கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து போராடுதல் என முப்பரிமாண கதையை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லி இருக்கிறார் இஷாக் ஹுசைனி.

வில்லனாக ரிஷத்  எம் எம் இலியாஸ், மும்பை மல்கோத்ரா, காதலிகளாக தில்ஷானா, ஹேமா ஆகியோருடன் புதுமுக நடிகர் நடிகை பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

போலந்து. ஜெர்மன்.ஆகிய நாடுகளிலும் சென்னை சுற்றுப் பகுதிகளிலும் தான் பிறந்த மதுரை மண்ணிலும் படப்பிடிப்பு நடத்தி அசத்தியிருக்கிறார் இஷாக் ஹுசைனி. விரைவில் அதிக திரையரங்குகளில் வெளிவர தயாராகிக் கொண்டிருக்கிறது.

இசை: சதாசிவ ஜெயராமன். ஒளிப்பதிவு : தயாள் ஓஷோ, தேவராஜ். எடிட்டிங்: நவீன் குமார். இணை இயக்கம், தயாரிப்பு மேற்பார்வை: என்.எம். இலியாஸ். மக்கள் தொடர்பு: விஜயமுரளி

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this