HomeCinemaகார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் 'உயிர் பத்திக்காம' ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ‘உயிர் பத்திக்காம’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

Published on

கார்த்தி நடித்திருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் இடம்பெற்ற ‘உயிர் பத்திக்காம..’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் டீஸர் வெளியாகி ஏழு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. இந்நிலையில் ‘வா வாத்தியார்’ படத்தில் இடம்பெற்ற ‘ உயிர் பத்திக்காம..’ எனத் தொடங்கும் முதல் பாடலும் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத பின்னணி பாடகர் விஜய் நாராயண்- பின்னணி பாடகி ஆதித்யா ரவீந்திரன் – பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். தமிழ் திரையிசையுலகின் ட்ரெண்ட்செட்டரான சந்தோஷ் நாராயணனின் வசீகரிக்கும் இசையில் உருவான இந்த பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.‌ கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.

Latest articles

பாட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வெள்ளி விழா நிறைவு விழா: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் பங்கேற்பு!

அடையாறு பாட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஓராண்டு கால வெள்ளி விழா கொண்டாட்டங்களின் மாபெரும் நிறைவு விழா ...

உண்மையான வெற்றி என்பது நண்பர்களையும் உங்களுடன் சேர்த்துக்கொண்டு முன்னேறுவதுதான்! ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ஃபிரண்ட்ஷிப் டே மெசேஜ்

திரையுலகில் வெற்றி பல விஷயங்களை மாற்றிவிடும்! தொழில் வாழ்க்கை புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குகிறது. உறவுகள் மாறுகின்றன. பல நேரங்களில்,...

முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் சென்னையில் நடத்திய ஜன்சபை மற்றும் தென்னிந்திய மாநாடு!

2002ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் தேசிய அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச், சென்னை...

More like this