HomeCinemaஉலகம் முழுவதும் வரவேற்புள்ள ஃபேண்டஸி ஹாரர் காமெடி கதைக்களத்தில் கனா தர்சன் நடிக்கும் 'ஹவுஸ் மேட்ஸ்'...

உலகம் முழுவதும் வரவேற்புள்ள ஃபேண்டஸி ஹாரர் காமெடி கதைக்களத்தில் கனா தர்சன் நடிக்கும் ‘ஹவுஸ் மேட்ஸ்’ ரிலீஸுக்கு தயாராகிறது!

Published on

ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் இப்போது முற்றிலும் புதிய களத்தில் உருவாகி திரைக்கு வரவிருக்கும் படம் ‘ஹவுஸ் மேட்ஸ்.’

கதையின் நாயகனாக கனா, தும்பா போன்ற படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த தர்ஷன் நடிக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் காளி வெங்கட் நடித்திருக்கிறார். அர்ஷா சாந்தினி பைஜூ, வினோதினி, தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

டிராஜவேல் எழுதி, இயக்கியிருக்கிறார். இவர் இயக்குனர் அஜய் ஞானமுத்துவிடம் இணை இயக்குநராகவும், சமீபத்தில் வந்து பெரும் வெற்றி பெற்ற டிமாண்டி காலனி 2 படத்தின் எழுத்தாளர் குழுவிலும் பணியாற்றி இருந்தார்.

படம் பற்றி படக்குழுவினர், ஒரு அபார்ட்மெண்டை சுற்றிலும் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாகவும், மிடில் கிளாஸ் குடும்பங்களின் அன்றாட உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையிலும், படம் முழுக்க முழுக்க ஃபேண்டஸி, ஹாரர் என அனைவரும் விரும்பி பார்க்கும் வகையிலும் குடும்பமாக சென்று ரசிக்கும் வகையிலும் படமாக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.

படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகவிருக்கிறது.

Latest articles

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் ‘நான் அவனில்லை’ ஜீவன்!

‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ திரைப்படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த...

சர்வதேச ரசிகர்களை மிரள வைத்த மலையாள சினிமா: டொராண்டோ திரைப்பட விழாவில் வரவேற்பை பெற்ற ‘ஹாஃப்’

சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவான 'ஹாஃப்' (HALF) திரைப்படம், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) மதிப்புமிக்க...

’விட்ரா மச்சா…’ எதிர்பாராத திருப்பங்களுடன் துள்ளல் இசையில் உருவான வித்தியாசமான காதல் தோல்வி பாடல்!

தமிழில் இசை சார்ந்த கதையாடலுக்கான புதிய களமாக சுயாதீன இசை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. திரைப்படப் பாடல்களுக்கு கிடைக்கும்...

More like this